மைத்­தி­ரியை நீக்குவதற்கான நடவடிக்கையையும் எடுக்கத் தயார் - அனு­ர

Published By: Digital Desk 3

12 Jul, 2019 | 11:36 AM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

ஜனா­தி­ப­திக்கு எதி­ராக குற்றப் பிரே­ர­ணையை கொண்­டு­வ­ரு­வ­தென்றால் பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் ஒரு  தரப்பு உறுப்­பி­னர்­களின் கையொப்பம் வேண்டும். எம்­மிடம் ஆறு பேர் உள்­ளனர்.  ஆகவே ஐக்­கிய தேசிய கட்­சியின் 75 உறுப்­பி­னர்கள் ஜனா­தி­ப­திக்கு எதி­ராக கையொப்­ப­மிட்டு கொடுத்தால் ஜனா­தி­ப­திக்கு எதி­ராக  நாம் குற்றப் பிரே­ர­ணையை கொண்­டு­வர தயா­ரென ஜே.வி.பி. யின் தலைவர் அனு­ர­கு­மார திசா­நா­யக நேற்று  சபையில் தெரி­வத்தார். 

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை பிர­தமர், அர­சாங்கம் மற்றும் அமைச்­ச­ர­வைக்கு எதி­ராக ஜே.வி.பி கொண்­டு­வந்­துள்ள நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையின் இரண்டாம் நாள் விவா­தத்தில் உரை­யாற்­றிய ஐக்­கிய தேசிய கட்­சியின் பின்­வ­ரிசை உறுப்­பினர் சமிந்த விஜ­ய­சிறி " மக்கள் விடு­தலை முன்­னணி நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை கொண்­டு­வந்­துள்­ளது ஆனால் இந்த தாக்­கு­தலில் பிர­தான குற்­ற­வா­ளி­யாக அல்­லது பொறுப்பை உண­ராது செயற்­பட்ட ஜனா­தி­ப­திக்கு எதி­ராக பிரே­ரணை ஒன்றை கொண்­டு­வ­ராது பிர­த­ம­ருக்கு எதி­ராக கொண்­டு­வந்­துள்­ளது" என்றார்.

இதன்­போது ஒழுங்குப் பிரச்­சினை எழுப்­பிய ஜே.வி.பியின் தலைவர் அனு­ர­கு­மார திசா­நா­யக :- 

இந்த தாக்­கு­தலில் பொருப்­பின்­மை­யாக  செயற்­பட்­டவர் ஜனா­தி­பதி என எமக்கும் தெரியும். ஆனால் ஜனா­தி­ப­திக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை கொண்­டு­வர முடி­யாது. அவ­ருக்கு எதி­ராக குற்­றப்­பி­ரே­ர­ணையே கொண்­டு­வர முடியும். குற்­றப்­பி­ரே­ர­ணையை கொண்­டு­வர வேண்டும் என்றால் பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் ஒரு உறுப்­பி­னர்­களின் கையொப்பம் வேண்டும். அதா­வது 75 உறுப்­பி­னர்கள் கையொப்­ப­மிட வேண்டும். ஜே.வி.பி. யாக நாம் 6 உறுப்­பி­னர்கள் மட்­டுமே சபையில் உள்ளோம். ஆகவே ஜனா­தி­ப­திக்கு எதி­ராக குற்­றப்­பி­ரே­ரணை ஒன்­றினை கொண்­டு­வர ஐக்­கிய தேசிய கட்­சியின் 75 உறுப்­பி­னர்­களின் கையொப்­பத்தை நீங்கள் பெற்­றுக்­கொ­டுத்தால் நாம் குற்­றப்­பி­ரே­ர­ணையை கொண்­டு­வர முடியும் என்றார். 

இதன்­போது பதில் தெரிவித்த சமிந்த விஜயசிறி எம்.பி:- உங்களின் 6 பேருடன் என்னையும் இணைந்துக்கொள்ளுங்கள் இப்போது  7 பேர் உள்ளோம். அப்படியென்றால் இன்னும் 68 உறுப்பினர்களின் கையொப்பம் தேவைப்படுகின்றது என்று கூறி சிரித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08