கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் கடந்த 10 ஆம் திகதி பேஸ்புக் இந்தியா நிறுவனத்தின் மாநாடு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கை உட்பட பல உலக நாடுகளில் பேசப்படும் , வெறுப்பூட்டும் பேச்சுக்களை கட்டுப்படுத்த இணையவெளி துஷ்பிராயோகங்களை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

வெறுப்பூட்டும் பேச்சுக்களை பரப்பிய 40 இலட்சம் பேஸ்புக் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் பேஸ்புக் நிறுவன இந்திய தலைமையகத்தின் அதிகாரிகள் இந்நிகழ்வில் தெரிவித்துள்ளனர்.

 பயங்கரவாத நிகழ்ச்சி நிரல்களை ஊக்குவிக்கும் 64 இலட்சம் முகநூல் கணக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இம் மாநாட்டில் பேஸ்புக் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.