இயக்குநர் ஏ.எல். விஜய் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார்.

இயக்குநர் ஏ.எல். விஜய் வைத்தியர் ஐஸ்வர்யா என்பவரை விரைவில் திருமணம் செய்யப் போவதாக கடந்த மாதம் 29ஆம் திகதி தெரிவித்தார்.

இந்நிலையில் விஜய், ஐஸ்வர்யா திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்துள்ளது. விஜய் நடிகை அமலா பாலை பிரிந்த பிறகு படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த விஜய்க்கு மறுமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர்.

இதையடுத்து பெற்றோர் பார்த்த பெண்ணான டாக்டர் ஐஸ்வர்யாவை விஜய் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் போது எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.