(ஆர்.யசி)

பாரா­ளு­மன்ற வளா­கத்தில் இன்று கூட­வி­ருந்த பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு அமர்­வுகள்  ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ள­துடன்  மீண்டும் 24 ஆம் திகதி புதன்­கி­ழமை நடை­பெ­ற­வுள்­ளது.   

இன்­றைய தெரி­வுக்­கு­ழு­விற்கு அழைக்­கப்­பட்­டி­ருந்த விசா­ர­ணை­யா­ளர்கள் சிலர் வெளி­நாட்டு விஜ­யத்தில்  இருப்­ப­தாலும்  சிலர் விசா­ரணை அமர்­வு­க­ளுக்கு  வர முடி­யாத வேறு கார­ணங்­களை கூரி­யுள்­ள­த­னாலும்  இன்­றைய தெரி­வுக்­குழு அமர்­வு­களை நிறுத்த குழு தீர்­மானம் எடுத்­துள்­ளது. அடுத்த மாதம் இறு­திக்குள் பிர­தமர் உள்­ளிட்ட முக்­கிய நபர்­களை அழைத்து விசா­ரணை நடத்தி அறிக்­கையை பாரா­ளு­மன்­றத்­திற்கு சமர்ப்­பிக்­க­வுள்­ள­தாக தெரி­வுக்­குழு தலைவர் பிரதி சபா­நா­யகர் ஆனந்த குமா­ர­சிறி தெரி­வித்தார். 

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் குறித்து விசா­ர­ணை­களை நடத்தி பாரா­ளு­மன்­றத்­திற்கு அறிக்கை சமர்ப்­பிக்க நிய­மிக்­கப்­பட்­டுள்ள பாரா­ளு­மன்ற விசேட தெரி­வுக்­கு­ழுவின் அமர்­வுகள் இன்­றைய தினம் காலை 9 மணிக்கு கூடும் என கடந்த அமர்­வு­களின் போது தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்­தது. இன்­றைய அமர்­வு­க­ளுக்­காக தெரி­வுக்­குழு முன்­னி­லையில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்  ரவி சென­வி­ரத்ன, பொலிஸ் பயங்­க­ர­வாத விசா­ர­ணைப்­பி­ரிவின் பணிப்­பாளர் வருண ஜெய­சுந்­தர, அரச புல­னாய்வு பிரிவு சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜெய­வர்­தன , குற்­ற­வியல் விசா­ரணை திணைக்­கள பணிப்­பாளர் ஷானி அபே­சே­கர, பயங்­க­ர­வாத விசா­ரணை பிரிவின் பொலிஸ் பரி­சோ­தகர் தரங்க பதி­ரன ஆகியோர் அழைக்­கப்­பட்­டி­ருந்­தனர். எனினும் இவர்­களில் சிலர் வெளி­நாட்டு விஜ­யத்தில் இருப்­ப­தாலும், பொலிஸ் அதி­கா­ரிகள் சிலர் வர முடி­யாத சூழ்­நி­லையில் இருப்­ப­தாலும் இன்­றைய தெரி­வுக்­குழு அமர்­வு­களை எதிர்­வரும் 24 ஆம் திகதி புதன்­கி­ழ­மைக்கு ஒத்­தி­வைக்க தெரி­வுக்­குழு கூடி தீர்­மானம் எடுத்­துள்­ளது. 

அத்­துடன் எதிர்­வரும் 24 ஆம் திக­தி­யுடன் அரச அதி­கா­ரி­களை விசா­ர­ணைக்கு அழைப்­பதை  நிறுத்­து­வ­தா­கவும் அடுத்த அமர்­வு­களில் பிர­தமர் உள்­ளிட்ட முக்­கிய சிலரை விசா­ர­ணைக்கு அழைத்து அடுத்த மாதம் இறுதிக்குள் தெரிவுக்குழு அறிக்கையை முழுமைப்படுத்தி பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க முயற்சிகளை முன்னெடுப்பதாகவும் தெரிவுக்குழுவின் தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்தார்.