காலி துறைமுகத்திற்கு அண்மித்த கடற்பரப்பிலிருந்து வெளிநாட்டுப் படகொன்றிலிருந்து 60 கிலோகிரேம் ஹெரோயினை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன் குறித்த படகிலிருந்த 9 பேரையும் கைதுசெய்துள்ளதாகவும், அவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.