எயரோஃபசியா எனப்படும் வயிற்றுக்குள் காற்று விழுவதால் ஏற்படும் பாதிப்புக்கள்

Published By: Digital Desk 4

11 Jul, 2019 | 09:30 PM
image

எம்மில் பலருக்கு ஒரு கோப்பை தண்ணீர் அருந்தினாலோ அல்லது சிறிதளவு பசியாறினாலோ வயிறு நிரம்பிவிடும். வயிறு உப்புசம் ஏற் பட்டது போல் உணர்வு வரும். இன்னும் சிலருக்கு பசியின்மை ஏற்படும். சிலருக்கு வாய் வழியாக தொடர்ச்சியாக ஏப்பம் வந்து கொண்டே இருக்கும். 

அதேபோல் மலம் கழிப்பதில் சிரமம் ஏற்படும். இத்தகைய அறிகுறிகள் தோன்றினால், அவர்கள் எயரோஃபசியா எனப்படும் காற்று விழுவதால் ஏற்படும் பாதிப்பிற்கு ஆளாகியிருக்கிறார்கள் எனலாம். சிலருக்கு இதன் காரணமாக  வயிற்று புண் மற்றும் நெஞ்செரிச்சல் போன்றவையும் ஏற்படக்கூடும்.

எம்மில் பலருக்கு பேசும் போதும், தண்ணீர் அருந்தும் போதும், சாப்பிடும் போதும், இன்னும் பலவித தருணங்களில் எம்மையும் அறியாமல் காற்றை விழுங்கும் பழக்கம் இருக்கிறது. காற்றை விழுங்குவதால், விழுங்கப்பட்ட காற்று வாய் வழியாகத்தான் வந்தாக வேண்டும் அல்லது ஆசனவாய் வழியாக வெளியேற வேண்டும். 

இந்த இரண்டு வழிகள் மட்டுமே இருப்பதால் பலருக்கு அடிக்கடி ஏப்பம் வரக்கூடும். இதன் காரணமாகவும் கூட சிலருக்கு இரைப்பைக்கு சென்ற உணவு, உணவுத் துகள்கள் மீண்டும் உணவுக்குழாய்க்குள் வருவதற்கான வாய்ப்புகள் உருவாகின்றன. சிலர் வேண்டுமென்றே ஏப்பத்தை உருவாக்கி வயிற்றுக்குள் இருக்கும் காற்றை வெளியேற்றுவார்கள். இது தவறு. ஆனால் சிலருக்கு வயிறு உப்புசம் என்று சொல்வார்கள். ஆனால் வயிறு பெரிதாவதில்லை அது போன்ற உணர்வை தான் இத்தகைய காற்று தோற்றுவிக்கிறது.

இதற்கு சரியான சிகிச்சை என்பது,வாழ்க்கை நடைமுறையை சரியான நேரத்திற்குள் கொண்டு வரவேண்டும். உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு, உறக்கம் என இந்த மூன்றையும் ஒழுங்குபடுத்தினால், இதனைத் தவிர்க்கலாம். மேலும் இத்தகைய பாதிப்பிற்கு தற்போது ஏராளமான நவீன மருந்துகள் அறிமுகமாகின்றன. இதனை தற்காலிகமான நிவாரணமாக எடுத்துக்கொண்டு, வாழ்க்கை நடைமுறையை மாற்றிக்கொண்டு இந்த பாதிப்பிலிருந்து நிரந்தரமாக மீளலாம்.

டொக்டர் சந்திரசேகர்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூல வியாதிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-03-18 17:35:54
news-image

வெப்ப அலையை எதிர்கொள்வது எப்படி?

2025-03-17 16:49:37
news-image

நியூமோகாக்கல் தடுப்பூசியை யார் செலுத்திக் கொள்ள...

2025-03-15 16:44:59
news-image

நுரையீரல் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2025-03-14 18:48:08
news-image

நிணநீர் நுண்ணறை வீக்க பாதிப்பிற்குரிய சிகிச்சை

2025-03-13 19:58:33
news-image

அன்கிலொக்லொஸியா எனும் நாக்கில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2025-03-12 15:11:15
news-image

டெம்போரோமாண்டிபுலர் ஜாயிண்ட் டிஸ்பங்சன் என காதில்...

2025-03-11 17:36:18
news-image

கண் புரை சத்திர சிகிச்சைக்கு பின்னரான...

2025-03-10 16:47:15
news-image

ஒலிகோஹைட்ராம்னியோஸ் எனும் பனிக்குட நீர் குறைப்பாடு...

2025-03-06 15:49:10
news-image

குளுக்கோமா நோய் : 2020 ஆம்...

2025-03-06 04:09:10
news-image

சமச்சீரற்ற இதய துடிப்பு பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும்...

2025-03-03 14:44:16
news-image

இதய பாதிப்பினை கண்டறிவதற்காக சி டி...

2025-03-01 16:56:34