தலைநகர் கொழும்பு வாழ் தமிழ் மக்களால் கொண்டாடப்படும் மருதமடு அன்னையின் 19 ஆவது பெருவிழா கொழும்பு  -12 புதுக்கடை பெல்மன்ட் வீதியில் அமைந்துள்ள நல்மரண மாதா ஆலயத்தில் கொடியேற்றத்துடன் நாளை ஆரம்பமாக உள்ளது. 

நாளைய தினம் மாலை 6. 15 மணிக்கு கொடியேற்றம் இடம்பெற்று தொடர்ந்து செபமாலை உச்சரிக்கப்பட்டு நவநாள் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு, மறுநாள் சனிக்கிழமை 6.15 மணிக்கு மாலை ஆராதனை நடைபெறும்.

மருதமடு அன்னையின் திருவிழா பாடல் திருப்பலி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டு அதைத் தொடர்ந்து அன்னையின் திருச்சொருப ஆசீரும் வழங்கப்படும்.

புதுக்கடை பங்குத் தந்தையான அருட்தந்தை ஜோய் மரியரட்ணம்,அருட்பணி கிறிஸ்டி ஜோன் ஆகியோரின் வழிநடத்தலிலும் மற்றும் திருவிழா ஏற்பாட்டு குழுவின் முயற்சியினாலும் மருதமடு அன்னையின் 19 ஆவது பெருவிழா ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளது.