(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் ஜனாதிபதியை வரவழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக சபையில் வலியுறுத்தினார். 

பாராளுமன்றத்தில் இன்று நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் "இந்த தாக்குதல் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சருக்கே அதிக பொறுப்புகள் உள்ளது, பாதுகாப்பு பலவீனமே இவை அனைத்திற்கும் காரணம் என சுட்டிக்காட்டினார்' 

இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய அனுரகுமார திசாநாயக, இந்த பயங்கரவாத தாக்குதல் விடயத்தில் பிரதான பொறுப்பு ஜனாதிபதியையே சாரும். அதில் மாற்றுக்கருத்தில்லை. இந்த விசாரணைகளை நடத்த தற்போது பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த தெரிவுக்குழு முன்னிலையில் ஜனாதிபதியை வரவழைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றார்.