7 மாவட்ட மக்களின் விவசாய பொருளாதாரத்தை வளப்படுத்த ஜனாதிபதி பணிப்புரை

Published By: Digital Desk 3

11 Jul, 2019 | 05:19 PM
image

ஏழு மாவட்ட மக்களின் விவசாய பொருளாதாரத்தை வளப்படுத்தும் எழுச்சிபெறும் கிராமிய குளங்கள் நிகழ்ச்சித்திட்டத்தை துரிதப்படுத்தி, இன்னும் சில மாதங்களில் அதன் நன்மையை மக்களுக்கு பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன  பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதியின்  எண்ணக்கருவான எழுச்சிபெறும் கிராமிய குளங்கள் திட்டம் பசுமை காலநிலை நிதியத்தின் 3,682 மில்லியன் ரூபா மற்றும் இலங்கை அரசாங்கத்தின் 1,250 மில்லியன் ரூபா செலவில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

2015 நவம்பர் மாதம் பிரான்ஸின் பரிஸ் நகரில் இடம்பெற்ற ஐநா. காலநிலை மாற்றம் தொடர்பான உடன்படிக்கையை தொடர்ந்து அவ்வுடன்படிக்கையின் அடிப்படை நோக்கமான காலநிலை மாற்றங்களுக்கு முகங்கொடுப்பதற்கான நிதி வசதிகளை வழங்கும் திட்டத்தின் கீழ் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் முன்வைத்த கோரிக்கையின் விளைவாக இத்திட்டத்திற்கு பசுமை காலநிலை நிதியத்தின் நிதியுதவி இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

இத்திட்டம் பொலன்னறுவை, குருணாகல், வவுனியா, புத்தளம், திருகோணமலை, மன்னார் ஆகிய 07 மாவட்டங்களையும் மல்வத்து ஓயா, மீ ஓயா, யான் ஓயா ஆகிய 03 கங்கைகளை அண்மித்ததாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. 

16 எல்லங்கா முறைமைகளின் 325 கிராமிய குளங்கள் மற்றும் 75 சுற்றாடல் முறைமைகளை அமைப்பதை உள்ளடக்கியுள்ளதுடன், 325 கிராமிய குளங்களை அண்மித்த 9,750 ஹெக்டெயார் நெற்பயிர்ச் செய்கையை மேம்படுத்துதல், 520,000 சிறியளவிலான விவசாயிகளுக்கு விவசாய காலநிலை ஆலோசனைகளை வழங்குதல், 16,677 பெண் விவசாயிகளை காலநிலைக்கு ஏற்ற விவசாயத்துறைகளில் ஈடுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுவரை 140 குளங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதுடன், இவ்வருட ஆகஸ்ட் மாதம் அவற்றை மக்களிடம் கையளிக்குமாறு ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார்.

இக்குளங்களை அண்மித்த கிராம மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டமும் இத்துடன் இணைந்ததாக நடைமுறைப்படுத்தப்படுவதுடன் இதற்காக பசுமை காலநிலை நிதியம் 1,732 மில்லியன் ரூபாவை முதலீடு செய்துள்ளது. இத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக இலங்கை அரசாங்கம் 1069 மில்லியன் ரூபா நிதியை முதலீடு செய்துள்ளது.

35 புதிய கிராமிய சமூக நீர் வழங்கல் முன்மொழிவு முறைமைகளை தாபித்தல், 4,000 மழைநீர் சேகரிக்கும் முறைமைகளை தாபித்தல், புதிய நீர் சுத்திகரிப்பு முறைமைகளை தாபித்தல் மற்றும் பாடசாலைகள், கிராமிய வைத்தியசாலைகளுக்கு புதிய சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்தலும் இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளது. 

இத்திட்டத்தினூடாக குறித்த வலயங்களில் வாழும் வெள்ளம், வரட்சி போன்ற இயற்கை அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்துவரும் குறைந்த வருமானம் பெறும் சுமார் 1,500,000 விவசாய குடும்பங்களின் வாழ்வாதார அபிவிருத்திக்கு உதவிகள் வழங்கப்படுகின்றது. தன்னியக்க காலநிலை மற்றும் நீர் அளவை முறைமைகளை தாபித்தல், காலநிலை திணைக்களத்தின் இயலுமையை மேம்படுத்தல், நீர் முகாமைத்துவம் மற்றும் விவசாய ஆலோசனைகளை தயாரித்து வழங்குதல், வெள்ள அனர்த்தத்திற்குள்ளாகும் பிரதேசங்களின் அனர்த்தத்திற்கு முன்னரான முன் தயாரிப்பு திட்டங்களை தயாரித்து நடைமுறைப்படுத்தலும் இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றது. 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02