இந்திய அணியின் இளம் வீரர் ரிசாப் பந்த் நியுசிலாந்திற்கு எதிரான அரையிறுதியில் ஆட்டமிழந்தமை குறித்து இங்கிலாந்தின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் வெளியிட்டுள்ள கருத்திற்கு யுவராஜ் சி;ங் பதிலடி கொடுத்துள்ளார்

பந்த்  முக்கியமானதொரு போட்டியில் ஆட்டமிழந்த விதம் குறித்து முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் ஏமாற்றம் வெளியிட்டு வருகின்றனர்

 கெவின் பீற்றர்சன் ரிசாப் பந்தின்  அந்த சொட்டினை கடுமையாக விமர்சித்துள்ளார்.

ரிசாப்  பந்த்  அந்த சொட்டை விளையாடுவதை எத்தனை தரம் நாம் பார்த்திருக்கின்றோம் என  டுவிட்டரில் பதிவு செய்துள்ள  கெவின் பீற்றர்சன் இதன்காரணமாகவே அவர் அணியில் சேர்க்கப்படாமலிருந்தார் எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு உடனடியாக பதிலளித்துள்ள யுவராஜ் சிங் அவர் புதியவர் தற்போதுதான் சர்வதேச போட்டிகளில் விளையாடுவது எப்படி என்பதை கற்றுக்கொண்டிருக்கின்றார் என குறிப்பிட்டுள்ளார்.

அவர் 8 ஒருநாள் போட்டிகளில் மாத்திரம் விளையாடியுள்ளார் இது அவரின் தவறில்லை அவர் இன்னமும் கற்றுக்கொண்டு முன்னேற்றம் காண்பார் என யுவராஜ் சிங் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதில்அளித்துள்ள பீற்றர்சன் பந்த்  எவ்வளவு சிறப்பான வீரர் என்பதன் காரணமாகவே நான் விரக்தியில் இந்த கருத்தை பதிவுசெய்தேன் என தெரிவித்துள்ளார்.

இதனை யுவராஜ் சிங் ஏற்றுக்கொண்டுள்ளார்.