(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்) 

அதிகாரம் எதுவும் இல்லாது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்துக்கும் ருவான் விஜயவர்தன பதவி விலக வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் பாராளுமன்றில் தெரிவித்தார். 

அத்துடன் கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற அரசியல் மாற்றத்தின் பின்னர் ஜனாதிபதி மீண்டும் எங்களிடம் ஆட்சியை ஒப்படைத்தாலும் எம்மிடமிருந்த சட்டம் ஒழுங்கு அமைச்சை தன்னிடம் வைத்துக்கொண்டார். அரசியல் செய்வதற்கே இதனை அவர் வைத்துக்கொண்டிருக்கின்றார். இந்த அமைச்சு இல்லாமல்  அரசாங்கம் அரசாங்கம் முன்செல்வது பயனில்லை என்றும் குறிப்பிட்டார்.