எனது இறுதி மூச்சிருக்கும்வரை எனது முழுத்திறமையையும் வெளிப்படுத்துவேன் என இந்திய அணியின் சகலதுறை வீரர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.

நியுசிலாந்துடனான நேற்றைய முதலாவது அரையிறுதியில் 59 பந்துகளில் 77 ஓட்டங்களை பெற்று இரசிகர்களின் மனதை கவர்ந்துள்ள நிலையிலேயே ஜடேஜா டுவிட்டரில் இதனை பதிவு செய்துள்ளார்.

டுவிட்டரில் ஜடேஜா மிகவும் உணர்ச்சிகரமான செய்தியொன்றை பதிவு செய்துள்ளதுடன் தனது ரசிகர்களிற்கு நன்றியை தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு வீழ்ச்சிக்கு பின்னரும் மீள எழுவதற்;கும் முயற்சியை ஒருபோதும் கைவிடாமலிருப்பதற்கும் கிரிக்கெட் எனக்கு கற்றுக்கொடுத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனது உத்வேகமாக உள்ள ஒவ்வொரு ரசிகருக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் ஆதரவிற்கு நன்றி என ரசிகர்களிற்கு தெரிவித்துள்ள ஜடேஜா எனக்கு தொடர்ந்து உத்வேகம் அளித்துக்கொண்டிருங்கள்   நான் எனது இறுதிமூச்சிருக்கும்வரை எனது திறமையை வெளிப்படுத்துவேன் எனவும்  தெரிவித்துள்ளார்.