கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம்  திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தடைசெய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமா அத் குழுவினால் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுதாக்குதலில் காயமடைந்து வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்று வந்த யுவதி  ஒருவர் இன்று உயிரிந்துள்ளார்.

தாக்குதல் நடந்து 2 மாதங்களுக்கு மேலாக சிகிச்சையளிக்கபட்டு வந்தநிலையிலேயே 22 வயதுடைய பெண் இறாகம வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை வட்டராங்கள் தெரிவித்துள்ளன.