(இராஜதுரை ஹஷான்)

தேர்தல் நெருங்கும் சமயத்தில் அரசாங்கத்தின் ஸ்தீரத்தன்மைக்கு பங்கம் விளைவிக்கும் நோக்கிலே தேசிய பாதுகாப்பு பலவீனம் அடைந்துள்ளதாக குற்றச்சாட்டை எதிர்தரப்பினரால் முன்வைப்பதாக குறிப்பிட்ட இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜயவர்தன, இன்று தேசிய பாதுகாப்பு முழுமையாக பலப்படுத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இராணுவ வீரர் அசலக காமினியின் 28 வது வருட நினைவு தின  நிகழ்வு நேற்று சுற்றுலாத்துமைஅமைச்சில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

களுத்துறை தொடக்கம் காலி  பிரதேசம் வரையில்  வான் மற்றும் தரைவழிகளின்  தாக்குதல்கள் நடத்த அடிப்படைவாத அமைப்பு திட்டமிட்டுள்ளதாக பொய்யான செய்தி  சமூகத்தின் மத்தியில் தற்போது காணப்படுகின்றது. 

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் வாந்திகளை  பரப்பவோருக்கு எதிராக  கடுமையான சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படும். மக்களை அச்சத்துக்குள்ளாக்கும் போலியான  செய்திகளை  பரப்புவதை ஒரு தரப்பினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் இதன்போது தெரிவித்தார்.