(எம்.மனோசித்ரா)

ஊழல் மோசடிகளை ஒழிப்பதாகக் கூறி கடந்த 2015 ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரு மாதத்திலேயே மத்திய வங்கி மோசடியில் ஈடுபட்டது.

ஊழலை ஒழிப்பதாகக் கூறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தனது ஆட்சியின் கீழ் இடம்பெற்ற இந்த பாரிய ஊழலை தடுக்க முடியாமல் போனது என்று பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார். 

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

ஊழலை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் நான்கு வருடங்களாகியும் அவ்வாறு எதையுமே செய்யவில்லை. மாறாக மஹிந்த அரசாங்கத்தை குறை கூறுவதையே பிரதான வேலையாகச் செய்து கொண்டிருந்தார்கள். 

தமது ஊழலை மறைத்து ஏனையோர் மீது பழிசுமத்திக் கொண்டிருந்த இந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற ஊழல்களை கடந்த 2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நிறைவடைந்ததிலிருந்து நாம் வெளிப்படுத்தி வருகின்றோம் என அவர் தெரிவித்தார்.