இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணி மூன்று விக்கெட்டுக்களை பறிகொடுத்து தடுமாற்றமடைந்துள்ளது.

பேர்மிங்கமில் இன்று மாலை 3.00 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதுவரை 8 ஓவர்களை எதிர்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்கள் மூவரும் 14 ஓட்டத்துக்குள்ளேயே ஆட்டமிழந்துள்ளனர். அதன்படி ஆரோன் பிஞ்ச் டக்கவுட்டுன் ஜேப்பர் ஆர்ச்சரின் பந்து வீச்சிலும் டேவிட் வோர்னர் 9 ஓட்டத்துடனும் கிறிஸ் வோக்ஸின் பந்து வீச்சிலும், ஹேண்ட்ஸ்கோப் 4 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளனர்.

சற்று முன்னர் வரை 8 ஓவர்கள் முடிவில் அவுஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 19 ஓட்டங்களை குவித்துள்ளது. ஆடுகளத்தில் ஸ்டீவ் ஸ்மித் 2 ஓட்டத்துடனும், அலெக்ஸ்கரி 4 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடி வருகின்றனர். 

இதேவேளை ஜேப்ர் ஆச்சர் வீசிய பெளன்சர் பந்து அவுஸ்திரேலிய அணியின் அலெக்ஸ்கரியின் தாடையை பதம் பார்த்ததில் அவர் காயமடைந்துள்ளார். இதனையடுத்து காயத்துக்கு மருந்து கட்டப்பட்டு தொடர்ந்து ஆடுகளத்தில் துடுப்பெடுத்தாடி வருகின்றார்.