பங்களாதேஸிற்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளிலும் விளையாடுமாறு இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவினர் லசித்மலிங்கவை கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

26ம் திகதி ஒரு போட்டியை விளையாடியவுடன் ஓய்வுபெற விரும்புவதாக மலிங்க தெரிவித்துள்ளார் என இலங்கை தெரிவுக்குழுவின் தலைவர் அசந்த டி மெல் குறிப்பிட்டுள்ளதாக பங்களாதேசின் கிரிக்கெட் இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் அவரை மூன்று போட்டிகளிலும் விளையாடுமாறு சம்மதிக்கவைக்க முடியும் என நம்பிக்கை கொண்டுள்ளேன் எனவும் அசந்த டிமெல் தெரிவித்துள்ளார்

அவர் ஓய்வு குறித்து சிந்திப்பதற்கு முன்னர் பங்களாதேஸ் அணியுடனான  ஒருநாள் தொடர் முழுவதையும் விளையாடவேண்டும் என நாங்கள் விரும்புகின்றோம்,அவரை அதற்கு இணங்கச்செய்வதற்கான முயற்சிகளை நான் மேற்கொள்வேன் என அசந்த டிமெல்தெரிவித்துள்ளார்.

நாங்கள் பங்களாதேஸ் அணியுடனான தொடரை வென்று ஐசிசி தரப்பட்டியலில் முன்னேற விரும்புகின்றோம் என அசந்த டி மெல் தெரிவித்துள்ளார்.