(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டின் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவதில்  அர்த்தமில்லை.

ஆளும் எதிர்கட்சிகள் இணைந்து ஒன்றாக பயங்கரவாத செயற்பாடுகளை தடுக்க வேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இன்று பிரதமர், அரசாங்கம் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக ஜே.வி.பி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், 

மக்கள் விடுதலை முன்னணி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணையின் சாராம்சம் என்னவெனில்  இந்த பயங்கரவாத தாக்குதல் மற்றும் அதன் பின்னர் அரசாங்கம் சரியாக செயற்படவில்லை என்பதேயாகும். 

உண்மையில் இந்த சம்பவம் அரசாங்கதின் பலவீனத்தை காட்டுகின்றது. தவறுக்கு அரசாங்கமாக நாம் அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும். ஆனால் இதற்கு தீர்வு அரசாங்கத்தை வீழ்த்துவதா அல்லது அனைத்து கட்சிகளும் இணைந்து இந்த பயங்கரவாதத்தை இல்லாது ஒழிப்பதா என்பதை சிந்திக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.