18 மாதங்கள் கழித்து இயல்பாக இயங்கிய இதயம்

Published By: Digital Desk 3

11 Jul, 2019 | 02:53 PM
image

ஈராக் நாட்டை சேர்ந்த வியாபாரி ஒருவர் (வயது 52) ஒன்றரை வருடங்களுக்கு முன்பு இதயம் பலவீனமடைந்து இந்தியாவில் டெல்லியில் உள்ள ஒரு இதய சிகிச்சை மையத்துக்கு சென்றுள்ளார்.

அவரை பரிசோதித்த வைத்தியர்  இதயம் செயலிந்து வருவதால் மாற்று இதயம் பொருத்த வேண்டும் அல்லது செயற்கை இதயம் பொருத்த வேண்டும் என்றார். மாற்று இதயம் கிடைக்க தாமதமானதால் அவருக்கு செயற்கை இதயம் பொருத்தப்பட்டது.

அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவரை தொடர்ந்து பரிசோதனை செய்ததில் செயற்கை இதயம் செயல்பட்டு வந்தது. உண்மையான இதயம் செயலிழந்து ஓய்வில் இருந்தது. ஆனால் 3 மாதம் கழித்து இந்த முறை பரிசோதனைக்கு வந்தபோது, அதிசயிக்கத்தக்க வகையில் அவரது உண்மையான இதயம் இயல்பாக செயல்பட்டது. சந்தேகம் அடைந்து மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். இதில் உண்மையான இதயம் நன்றாக செயல்பட்டு, செயற்கை இதயத்தின் செயல்பாட்டை குறைத்து இருந்தது தெரிந்தது.

வழக்கமாக இதுபோன்ற சமயங்களில் உண்மையான இதயம் 10 முதல் 15 சதவீதம் தான் குணமாகும். ஆனால் இவரது இதயம் மிக நன்றாக செயல்பட்டது. இதனை உறுதி செய்த பின்னர், அவரது செயற்கை இதயத்தை அறுவை சிகிச்சை இல்லாமல் புதிய தொழில்நுட்பத்தில் அகற்றிவிட்டதாகவும் இப்போது அவரது இதயம் எந்த உதவியும் இல்லாமல் நன்றாக செயல்படுவதாகவும் வைத்தியர் தெரிவித்தள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15