(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

ஜனாதிபதி -பிரதமர் மற்றும் அமைச்சரவை இணைந்தே இந்த நாட்டினை நாசமாக்கியுள்ளனர். ஜனாதிபதியை உருவாக்கியவர்கள் இன்று ஜனாதிபதியை எம்மிடம் பொறுப்பளிக்க வேண்டாம் என எதிர்க்கட்சி உறுப்பினர் விமல் வீரவன்ச எம்.பி சபையில் தெரிவித்தார். 

இந்த அரசாங்கத்தை உருவாக்க முன்னணியில் நின்று செயற்பட்ட ஜே.வி.பி இன்று அரசாங்கத்தை எதிர்த்து நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவது வேடிக்கையாக உள்ளது.

பாராளுமன்றத்தில் பிரதமர் எக்ஸா  உடன்படிக்கை குறித்து குறிப்பிட்டார். ஆனால் அவர் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த உடன்படிக்கை பொய்யான ஒன்று. ஆனால் உண்மையான உடன்படிக்கை 50 பக்கங்களை கொண்டது. இது அமைச்சரவைக்கு கூட தெரியாது செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை என்றும் அவர் குறிப்பிட்டார். 

பிரதமர், அரசாங்கம் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக ஜே.வி .பி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணையின் இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.