யாழ் சுண்டுக்குழி காட்டு கந்தோர் வீதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

அயலவர்கள் குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதை அடுத்து உள்ளே சென்று பார்த்தபோது அழுகிய நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதையடுத்து அது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனரை். 

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த யாழ் சிறு குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாலதி எனும் 58 வயதுடைய பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.