இனிப்பு பானங்களான சோடா மற்றும் பழச்சாறு போன்றவற்றை அருந்துவதால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

சமீபத்திய காலங்களில் இனிப்பு பானங்களின் நுகர்வு உலகளவில் அதிகரித்து காணப்படுகிறது. அந்தவகையில் அதிக கலோரி கொண்ட பானங்களால்  உடல் பருமன் அதிகரிக்கின்றது என்பதிலும் பார்க்க அதிக ஆபத்தான புற்றுநோய்யை விளைவிக்க முக்கிய காரணியாக தற்போது அமைந்துள்ளன.

பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் குழு இனிப்பு பானங்களின் அதிக நுகர்வு மற்றும் ஆபத்தான புற்று நோய்களான மார்பக, புராஸ்டேட் மற்றும் குடல் புற்று நோய்களுக்கிடையிலான தொடர்பினை மதிப்பிட ஒரு ஆராய்ச்சியினை மேற்கொண்டனர்.

அந்த ஆய்வில் வயதுவந்தவர்கள் ஒரு லட்சம் பேரில்  சராசரியாக 42 வயதுடைய 79 சதவீத பெண்களை ஆய்விற்குட்படுத்தினார்கள்.

ஆய்வில்  பங்குபற்றியவர்களிடம் அதிகபட்சம் ஒன்பது ஆண்டுகள் பின்பற்றப்படும் உணவு தொடர்பாக 24 மணித்தியாலங்கள் இணையத்தளம் மூலம் இனிப்பு மற்றும் செயற்கையாக இனிப்பு பானங்கள் மற்றும் 100 சதவீத பழச்சாறுகளின் அன்றாட நுகர்வு தொடர்பான உணவு வினாத்தாள் பூர்த்தி செய்யப்பட்டு கணக்கிடப்பட்டது.

பின்னர்  பங்குபற்றியவர்களில்  யார் இனிப்பு பானங்களை தினசரி உட்கொள்ளவது உணவுப் பானங்களுக்கு எதிராக அளவிடப்பட்டு பங்குபற்றியவர்களின் மருத்துவ பதிவுகளோடு புற்றுநோய் காரணிகளை ஒப்பிட்டு பார்த்தனர்.

அதில்,ஒரு நாளைக்கு 100 மில்லி லீற்றருக்கு அதிகமாக இனிப்பு பானங்களை அருந்துவதனால்  18 சதவீதம் புற்று நோய்க்கான ஆபத்து அதிகரிக்கும் எனவும்  22 சதவீதம் மார்பக புற்று நோய்க்கான ஆபத்து அதிகரிக்கும் எனவும் தெரியவந்துள்ளது. 

எனவே  இனிப்பு பானங்கள் மற்றும் பழச்சாறுகள் இரண்டுமே அதிக ஆபத்தை கொண்டவையாக விளங்குகின்றமை குறித்த ஆய்வில் இருந்து வெளியாகியுள்ளது.

ஆய்வின் போது சாராசரியாக 59 வயதுடைய  2,193 பேர் நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

மேலும் பிரிட்டனைச் சேர்ந்த புற்றுநோய் ஆராய்ச்சி புள்ளிவிவர நிபுணர்  "இந்த பெரிய, நன்கு வடிவமைக்கப்பட்ட ஆய்வு, சர்க்கரை பானங்களின் நுகர்வு சில புற்றுநோய்களின் அபாயத்துடன் தொடர்புடையதாக இருக்கக்கூடும் என்பதற்கான தற்போதைய ஆதாரங்களாக உள்ளதென" என்றுதெரிவித்தார்.