வளை­குடா கடல் பரப்­பி­னூ­டான சுதந்­தி­ர­மான கப்பல் பய­ணங்­களை உறுதி  செய்­வ­தற்கு ஈரான்  மற்றும் யேம­னிய கடற்­க­ரை­க­ளுக்கு அப்­பா­லுள்ள  கடல் பிராந்­தி­யத்தைப் பாது­காப்­ப­தற்கு  சர்வதேச இரா­ணுவக் கூட்­ட­மைப்­பொன்றை  உரு­வாக்க அமெரிக்கா விரும்­பு­வ­தாக அமெ­ரிக்க சிரேஷ்ட கடற்­படை ஜெனரல்  ஒருவர் தெரி­வித்தார்.

முக்­கிய வர்த்­தகப் பாதை­களை உள்­ள­டக்­கிய அந்தப் பிராந்­தி­யத்­தி­லான சுதந்­தி­ர­மான கடற்­ப­ய­ணத்தை உறு­திப்­ப­டுத்தத் தாம் விரும்­பு­வ­தாக கடற்­படை ஜென­ர­லான ஜோசப் டன்போர்ட் தெரி­வித்தார்.

கடந்த மாதம் அந்தப் பிராந்­தி­யத்தில்  எண்ணெய் தாங்கிக் கப்­பல்கள் மீது நடத்­தப்­பட்ட தாக்­கு­தல்­க­ளுக்கு ஈரா­னிய ஆத­ர­வுடன் செயற்­படும் கிளர்ச்­சி­யா­ளர்­களே கார ணம் என அமெ­ரிக்கா குற்­றஞ்­சாட்­டி­யி­ருந்­ தது.

இந்­நி­லையில் வளை­குடா கடல் பரப்­பி­லான பாது­காப்பை உறு­திப்­ப­டுத்தும் இந்த செயற்­பாட்டை முன்­னெ­டுக்க ஒரு தொகை நாடு­க­ளுடன் அமெ­ரிக்கா பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ள­தாக ஜெனரல் ஜோசப் டன் போர்ட் தெரி­வித்தார்.

அமெ­ரிக்கா அந்தப் பிாந்­தி­யத்தில் பய­ணிக்கும் கப்­பல்­க­ளுக்கு கட்­டளை மற்றும் கட்­டுப்­பாட்டை வழங்­க­வுள்­ள­தாக தெரி­வித்த அவர், ஏனைய நாடுகள் அந்தக் கப்­பல்­க­ளுக்கு பாது­காப்பை வழங்க அவற்­றுக்­கி­டையில் தமது பட­கு­களை ரோந்து நட­வ­டிக்­கையில் ஈடு­ப­டுத்­துவ­தற்கு எதிர் பார்க்­கப்­ப­டு­வ­தாக கூறினார்.

அமெ­ரிக்கா இந்­ந­ட­வ­டிக்­கைக்­கான ஆத­ரவைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக ஒவ்வொரு நாடும் கொண்­டுள்ள குறிப்பிட்ட திறன் ­களை அடை­யாளம் காண்ப­தற்­காக இரா­ணு­வத்­தி­ன­ருடன் நேர­டி­யாக இணைந்து பணியாற்றவுள்ளதாக  அவர் மேலும் தெரி வித்தார். வளைகுடா மற்றும் செங்கடலை சென்றடைவதற்கான பாதையாகவுள்ள ஹொர்மஸ் நீரிணை மற்றும் பாப் அல் மன்டாப் நீரிணை என்பன முக்கிய தந்தி ரோபாய கடல் பிராந்தியங்களாக விளங்கு கின்றன.

குறைந்தளவானவர்களின் பங்களிப்புடன்  சிறிய நடவடிக்கையொன்றையே மேற் கொள்ள முடியும் என்பதால் தம்மை அடை யாளப்படுத்தும் வகையில் இந்நடவடிக்கை யில் பங்கேற்க விருப்பம் கொண்டுள்ள  ஒரு தொகை நாடுகளை உள்ளடக்கி  இந்த செயற்கிரமத்தை விரிவாக்கம் செய்ய எதிர் பார்த்துள்ளதாக அவர் கூறினார். பாப் அல் மன்டாப் நீரிணையூடாக ஒவ்வொரு நாளும் சுமார் 4 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் ஏனைய நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.