ஆப்­கா­னிஸ்­தானில் அர­சாங்கப் படை­யினர்  நடத்­திய இரு வேறு தாக்­கு­தல்­களில்  குறைந்­தது 12  பொது­மக்கள் கொல்­லப்­பட்­டுள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

கட்­டாரின் டோஹா நகரில் இடம்­பெற்ற கூட்­டத்தில் பொது­மக்­ளுக்கு எதி­ரான தாக்­கு­தல்­களை  முடி­வுக்கு கொண்டு வரு­வ­தாக  ஆப்கான்  தலை­வர்­களும் தலிபான் தீவி­ர­வா­தி­களும் இணக்கம் கண்­டி­ருந்த நிலை­யி­லேயே இந்தத் தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது.

வட பஹ்லான் மாகா­ணத்­தி­லுள்ள  கிரா­ம­மொன்றில் நடத்­தப்­பட்ட வான் தாக்­கு­தலில் தாயொ­ரு­வரும் அவ­ரது 6 பிள்­ளை­களும் உயி­ரி­ழந்­துள்­ள­தாக மாகா­ண­சபை உறுப்­பி­ன­ரான ஷம்­ஸுல்ஹக் பராக்­ஸாயி தெரி­வித்தார்.

இந்தத் தாக்­கு­தலில் அந்தப் பிள்­ளை­களின் தந்­தை­யான இஸ்­மாயில் காய­ம­டைந்து  மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.

எதி­ரி­களை அகற்­று­வ­தற்கு மேற்­கொள்­ளப்­பட்ட  வான் தாக்­குதல் நட­வ­டிக்­கை­யொன்றின் போது  ஒரே குடும்­பத்தைச் சேர்ந்த 7 பேர் உயி­ரி­ழந்­துள்­ளதை தாம் அறி­வ­தாக ஆப்கான் பாது­காப்பு அமைச்சால் வெளியி­டப்­பட்­டுள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் இது தொடர்பில் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக அந்த அறிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அதே­ச­மயம் வார்டொக் மாகா­ணத்­தி­லுள்ள மருத்­து­வ­ம­னை­யொன்றின் மீது  நேற்று முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை இரவு ஆப்கான் பாது­காப்பு படை­யி­னரால்  மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தலில் இரு மருத்துவர்கள், இரு நோயா­ளிகள் மற்றும் பாது­காப்பு உத்­தி­யோ­கத்தர் ஒருவர் கொல்­லப்­பட்­டுள்­ள­தாக மாகாண சபைத் தலை­வ­ரான ஹாஜி அக்தர் மொஹமட் தெரி­வித்தார்.

மருத்­து­வ­மனை மீது நடத்­தப்­பட்ட இந்தத் தாக்­குதல் பெரிதும் வருந்தத் தக்­கது என அவர் கூறினார்.

இதன்­போது சுவீ­டனால் நிதி­வ­ச­தி­ய­ளிக்­கப்­பட்டு தன்கி சைடன் பிராந்­தி­யத்தில் செயற்­படும் அந்த மருத்­து­வ­ம­னையைச் சேர்ந்த மருத்­துவர் ஒரு­வ­ரையும் பாது­காப்பு படை­யினர் கைது­செய்­துள்­ளனர்.

இந்­நி­லையில் இந்த மருத்­து­வ­மனை மீதான  தாக்­குதல் மற்றும் மருத்­து­வரின் கைது என்­பன தொடர்பில் ஆப்கான் அதி­கா­ரிகள் எது­வித விளக்­கத்­தையும் அளிக்­க­வில்லை.