வைத்தியத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்காக 30 ஆயிரம் வேலை வாய்ப்புகளுக்காக இலங்கையர்களை இணைத்துக்கொள்வதற்கான ஒப்பந்தமொன்றை இலங்கை அமெரிக்காவுடன் மேற்கொண்டுள்ளது.

அமெரிக்க வெளிநாட்டு தொழிலாளர் ஆட்சேர்ப்பு பதிவு பணியகம் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகங்களிடையே இவ் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ் ஒப்பந்தமானது 5 வருடகாலம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது இலங்கை சார்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரள மற்றும் செயலாளர் ஜி.எஸ். விதானகே ஆகியோர் கலந்து கொண்டனர்.

தாதியர்கள் இணைக்கப்படுபவர்கள் 3 வருடகால சேவை ஒப்பந்தத்திற்குள் இணைக்கப்படுவதுடன் முதலாவது குழு வெகுவிரைவில்  அமெரிக்கா செல்லவுள்ளதாகவும் அவர்களுக்குரிய  பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது.