உலகக் கிண்ணத் தொடரின் இன்று இடம்பெறும் இரண்டாவது அரைறுதி ஆட்டத்தில் ஆர்ரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணியும், இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதவுள்ளன.

அதன்படி இப் போட்டியானது இன்று மாலை 3.00 மணிக்கு பேர்மிங்கமில் ஆரம்பமாகவுள்ளது.

நேற்றைய தினம் மான்செஸ்டரில் நடைபெற்ற முடிந்த முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி இந்திய அணியை 18 ஓட்டத்தினால் வீழ்த்தி இரண்டாவது தடவையாகவும் சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ண இறுதுச் சுற்றுக்குள் நுழைந்தது.

இந் நிலையில் இன்று ஆரம்பமாகவுள்ள ஐ.சி.சி.யின் 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் இரண்டாவது இறுதிச் சுற்று ஆட்டத்தில் கிரிக்கெட்டில் பரம எதிரிகளாக கருதப்படும் இந்தியா - பாகிஸ்தான் போன்ற அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளும் களம் காணுகின்றன. 

அவுஸ்திரேலிய அணியைப் பொருத்தவரையில் லீக் தொடரில் இதுவர‍ை 9 போட்டிகளை எதிர்கொண்டு 7 வெற்றிகைளையும், 2 தோல்விளையும் சந்தித்து 14 புள்ளிகளுடன் இரண்டாவது இடம் பிடித்தது. 

5 முறை சாம்பியனான அவுஸ்திரேலியா துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சிலும் சரி விஸ்வரூம் கொண்டுள்ளது. துடுப்பாட்டத்தில் டேவிட் வோர்னர் 3 சதம், 3 அரைசதம் உட்பட 638 ஓட்டங்களை பெற்றுள்ளது. அணித் தலைவர் ஆரோன் பிஞ்ச் 2 சதம், 3 அரைசதம் உடப்ட 507 ஓட்டத்தையும், அலெக்ஸ் கரி 3 அரைசதத்துடன் 329 ஓட்டங்களையும் எடுத்துள்ளனர்.

இதேவேளை பந்து வீச்சில் மிட்செல் ஸ்டாக் இதுவர‍ை 26 விக்கெட்டுக்களையும், பேட் கம்மின்ஸ் 13 விக்கெட்டுக்களையும் சாய்த்துள்ளனர். 

இங்கிலாந்து அணியை பொருத்தவரையில் லீக் சுற்றில் 9 ஆட்டங்களை எதிர்கொண்டுள்ளது. அதில் 6 வெற்றியையும், 3 தோல்வியையும் சந்தித்து 12 புள்ளிகளுடன் 3 ஆவது இடம் பிடித்திருந்தது. 

துடுப்பாட்டத்தில் ஜோரூட் 2 சதம், 3 அரைசதம் உட்பட 500 ஓட்டங்களையும், பெயர்ஸ்டோ 2 சதம், அரைசதம் உட்பட 462 ஓட்டங்களையும், பென் ஸ்டோக்ஸ் 4 அரைசதத்துடன் 381 ஓட்டங்களையும், ஜோசன் ரோய் ஒரு சதம், 3 அரைசதம் உட்பட 341 ஓட்டங்களையும் எடுத்து நல்ல நிலையில் உள்ளனர்.

பந்து வீச்சுலும் ஜோப்ரா ஆர்ச்சர் 17 விக்கெட்டுக்களையும், மார்க்வுட் 16 விக்கெடுக்களையும், கிறிஸ்வோக்ஸ் 10 விக்கெட் விக்கட்டுக்களையும் சாய்த்துள்ளனர்.

அவுஸ்திரேலிய அணி இப்போட்டியில் இங்கிலாந்து அணியை தோற்கடித்தால் 8 ஆவது முறையாகவும் இறுதிச் சுற்றில் கால்பதிக்கும் அதேவேளை இங்கிலாந்து அணி இப் போட்டியில் வெற்றிகொண்டால் 4 ஆவது முறையாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும்.

சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ண அரங்கில் இவ்விரு அணிகளும் இதுவரை 8 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் அவுஸ்திரேலிய அணி 6 போட்டிகளிலும் இங்கிலாந்து அணி 2 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன.

இங்கிலாந்து அணி இறுதியாக 1992 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றிருந்தது. எனினும் அதன் பின்னர் இவ்விரு அணிகளும் மோதிய ஒருநாள் உலகக் கிண்ண ஆட்டங்களில் அவுஸ்திரேலிய அணியே வெற்றிபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலிய - இங்கிலாந்து அணிகள் இதுவரை மோதிய அனைத்து உலகக் கிண்ண ஆட்டங்கள்

* 2019 - அவுஸ்திரேலியா 64 ஓட்டத்தினால் வெற்றி

* 2015 - அவுஸ்திரேலியா 111 ஓட்டங்களினால் வெற்றி

* 2007 - அவுஸ்திரேலியா 7 விக்கெட்டுக்களினால் வெற்றி

* 2003 - அவுஸ்திரேலியா 2 விக்கெட்டுக்கிளினால் வெற்றி

* 1992 - இங்கிலாந்து 8 விக்கெட்டுக்களினால் வெற்றி

* 1987 - அவுஸ்திரேலியா 7 ஓட்டங்களினால் வெற்றி

* 1979 - இங்கிலாந்து 6 விக்கெட்டுக்களினால் வெற்றி

* 1975 - அவுஸ்திரேலியா 4 விக்கெட்டுக்களினால் வெற்றி