சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் விட்டுச்சென்ற கண்ணி வெடி தாக்குதலில் ஏழு குழந்தைகள் சிக்கி உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 

சிரியா ஜனாதிபதி பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே 2011ஆம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இந்த உள்நாட்டுப்போரை பயன்படுத்தி அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் கால் பதித்தனர்.அங்கு டெயிர் அல் ஜோர் மாகாணத்தில் உள்ள டப்லான் நகரம், ஐ.எஸ். பயங்கரவாதிகள் வசம் இருந்து வந்தது. கடந்த ஆண்டு உள்நாட்டு படையினர் அந்த நகரத்தை ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிடியில் இருந்து விடுவித்தனர்.

இந்நிலையில் அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் புதைத்து விட்டு சென்ற கண்ணி வெடிகளில் சிக்கி மக்கள் உயிரிழப்பது தொடர்கதை ஆகி வருகிறது.

அங்கு நேற்று முன்தினம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் விட்டுச்சென்ற கண்ணி வெடி தாக்குதலில்  7 குழந்தைகள் சிக்கி உயிரிழந்துள்ளனர்.