(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று சினமன் கிரேண்ட் ஹோட்டலில்  தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய மொஹம்மட்  இப்ராஹிம் இன்சாப் அஹமட் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோரின் வங்கிக் கணக்கு விபரங்களை  சி.ஐ.டி.க்கு வழங்க அரச மற்றும் தனியார் வங்கிகளுக்கு  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க குற்றப் புலனயவுப் பிரிவு முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இதற்கான உத்தர்வுகளை பிறப்பித்தார்.