வவுனியா தெற்கு வலய ஆசிரியர்கள் சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று (10) மாலை 3 மணியளவில் பழைய பஸ் நிலையத்திலிருந்து மணிக்கூட்டு கோபுர வீதி வழியாக கண்டி வீதியாக  கோசங்களை எழுப்பியவாறு வவுனியா தெற்கு வலய கல்வி பணிமனைக்கு முன்பாக சென்று போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

இப் போராட்டத்தை நடத்த முக்கிய நோக்கம் என்னவென்றால் இருபத்தியிரண்டு வருடங்களாக ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு இது வரை வழங்கப்படவில்லை. எதுவித மாற்றங்களும் செய்யப்படவில்லை, ஆசிரியர்களுக்கு மன அழுத்தங்களை தரக்கூடிய வேலைகளை செய்கிறார்களே ஒளிய ஆசிரியர்கள் சுதந்திரமாக கற்பிப்பதற்குரிய வழி வகைகள் எதுவும் செய்துதரவில்லை. வரவு செலவு திட்டத்தில் கல்விக்கு ஆறு வீதத்தால் அதிகரிக்க அரசாங்கம் மறுத்துவருகின்றது.

இன்று நாங்கள் வவுனியா தெற்கு வலயத்தில் ஆரம்பித்திருக்கின்றோம். இப் பிரச்னையை இத்துடன் நிறுத்தாது தொடர்ச்சியாக மாகாண மட்டம் மற்றும் தேசிய மட்டங்கள் வரை எமது உரிமைகளை  வென்றெடுக்கும்வரை கொண்டு செல்வோம். 

ஆசிரியர்களுக்குரிய சம்பளம் என்பது சாதாரண ஒரு தொழிலாளிக்கு கொடுக்கும் சம்பளம் கூட எமக்கு இல்லை என்றே கூற வேண்டும்  என மேலும் தெரிவித்தனர்.