(எம்.மனோசித்ரா)

விரைவுத் தபால் சேவைக்கூடாக மிகவும் சூட்சுமமான முறையில் போதை மாத்திரைகளை கடத்த முற்பட்ட சந்தேகநபர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று பெல்ஜியத்திலிருந்து விரைவுத் தபால்  மூலம் வந்த பொதியொன்றை பெறுவதற்கு குறித்த சந்தேகநபர் சென்றிருந்து போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

அந்த பொதியில் மிகவும் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 14 மில்லியன் 760,000 ரூபா பெறுமதியுடைய 2952 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 25 வயதுடைய  மௌன்டவினியா பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று சுங்க ஊடகப்பிரிவு தெரிவித்தது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர். 

அத்தோடு குறித்த சந்தேநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.