சீனாவின் ஷென்சென் பகுதியில் வசிக்கும் தம்பதியினருக்கு கை மற்றும் கால்களில் 31 விரல்களுடன்  ஆண் குழந்தையொன்று பிறந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

 

அந்த குழந்தைக்கு கை மற்றும் கால்களில் 31 விரல்கள் இருந்துள்ளன. ஒரு கையில் 8 விரல்களும், மற்றைய கையில் 7 விரல்களும், ஒவ்வொரு காலிலும் 8 விரல்கள் என மொத்தம் 31 விரல்களுடன் அந்த குழந்தை பிறந்துள்ளது. ஆனால் கை மற்றும் கால்களில் பெருவிரல்கள் இல்லை.  

அந்த குழந்தைக்கு மருத்துவ சிகிச்சைக்கு உதவுமாறு பெற்றோர்கள் உதவி கோரியுள்ளனர்.  

இதுபோன்று அதிக விரல்களுடன் ஆயிரத்தில் ஒரு குழந்தை பிறப்பதாக சீன மருத்தவர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், குழந்தையின் தாய்க்கும் இது போன்று கால் மற்றும் கைகளில் அதிக அளவில் விரல்கள் உள்ளன. 

 எனவே மரபு வழியாக இக் குழந்தையும் அதிக விரல்களோடு பிறந்திருக்கலாம் என மருத்துவர்கள் கருதுகிறார்கள்.

 

அந்த குழந்தையை அனைவரும் 'ஹாங்காய்' என்று அழைக்கிறார்கள். கை, கால்களில் விரல்கள் அதிகமாக இருப்பதால் அந்த குழந்தை மிகவும் சிரமப்படுவதாகவும், தகுந்த சிகிச்சை மூலம் அதை சரிசெய்ய குழந்தையின் பெற்றோர் தீர்மானித்துள்ளனர். 

 

அக்குழந்தையின் தந்தை ஏழை என்பதால், தனது குழந்தையின் சிகிச்சைக்கு உதவும்படி கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.