முஸ்லிம்களை தவறாகப் பார்க்கக்கூடாது - ஹர்ஷ டி சில்வா

Published By: Daya

10 Jul, 2019 | 04:12 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்) 

பயங்ரவாத தாக்குதல் மூலம் ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும் தவறாக பார்க்கக்கூடாது. அனைத்து முஸ்லிம் மக்களும் பயங்கரவாதிகள் அல்ல. ஆனாலும் சஹ்ரான்களை உருவாக்கிவர்களை இல்லாமலாக்கவேண்டும். அத்துடன் மத்திய நிலையில் இருக்கும் முஸ்லிம் மக்களுக்கு நெருக்கடிகளை கொடுத்து அவர்களையும் அந்த அடிப்படைவாத கூட்டத்துக்குள் தள்ளிவிடாமல் அவர்களுக்கு உதவிசெய்யவேண்டும்  என அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் ஹர்ஷடி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று மக்கள் விடுதமலை முன்னணியினால் அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவந்திருந்த நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

கடந்த ஏப்ரல்  21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக அரசாங்கமும் அமைச்சர்களும் அறிந்துகொண்டிருந்ததாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருந்தார். அவ்வாறு யாரும் அறிந்திருக்கவில்லை. எமது பாதுகாப்பு பிரிவினர் அதுதொடர்பில் எமக்கு அறிவுறுத்தி இருக்கவில்லை. அத்துடன் தாக்குதல் இடம்பெறுவதற்கு முந்திய புதன் கிழமை நான் திருகோணமலையில் இருந்தேன்.

அப்போது பேராயர் ஆசிறிபெரேரா என்னுடன் தொடர்புகொண்டு, அனுராதபுரத்தில் மெதடிஸ்த பள்ளிக்கு கல் அடிக்கின்றனர். இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டார். மறுநாள் வியாழக்கிமை நான் பேராயர், பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் பிரதமருடன் கலந்துரையாடலை ஏற்பாடுசெய்தேன். அதன்போது அவர்கள் மெதடிஸ்த பள்ளிக்கு கல் அடிப்பது தொடர்பாக கலந்துரையாடினர்.

இதுதொடர்பாக அனுராதபுரம் பொலிஸார் டுவிட்டர் அறிவிப்பொன்றை மேற்கொண்டு, இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறும் ஏனெனில் மறுநாள் பெரிய வெள்ளிக்கிழமை வருகின்றது. ஞாயிற்றுக்கிழமை உயிர்த்த ஞாயிறு தினமாகும் என அறிவுறுத்தியிருந்தோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரண்டு மாதங்களுக்குள் உப்பூறல் கிராமத்தில் ஆறு...

2026-01-24 14:45:23
news-image

இலங்கை சுற்றுலாத்துறையில் எழுச்சி: 22 நாட்களில்...

2026-01-24 17:07:31
news-image

தெற்கு கடலில் 270 கிலோ போதைப்பொருளுடன்...

2026-01-24 17:02:47
news-image

போதைப்பொருள் பாவனை செய்யும் 480 வாகன...

2026-01-24 16:37:38
news-image

தனது கணவரையும் அவரது காதலியையும் கூரிய...

2026-01-24 16:10:32
news-image

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் வழங்கும்...

2026-01-24 15:53:03
news-image

நாடளாவிய ரீதியில் பொலிஸார் அதிரடி: ஒரே...

2026-01-24 15:33:09
news-image

சட்டவிரோதமாக புதையல் தோண்டிய இருவர் கைது!

2026-01-24 11:56:34
news-image

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தின்...

2026-01-24 15:17:07
news-image

மின்சார சபையின் மறுசீரமைப்பு திட்டம் இறுதிக்கட்டத்தில்!

2026-01-24 15:01:30
news-image

இந்தியக் குடியரசு தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2026-01-24 15:00:31
news-image

பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த...

2026-01-24 14:16:03