அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் நாடாக இந்தியா நீண்ட காலமாக உள்ளது. இதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், இந்தியா மீது மீண்டும் குற்றச்சாட்டியுள்ளார்.

இது குறித்து ட்ரம்ப் தனது டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது,

அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா கூடுதலான வரி விதிப்பதாக  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டி வருகின்ற நிலையில், முன்னுரிமை வர்த்தக நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியாவை அவர் அண்மையில் நீக்கினார்.

இந்நிலையில், கடந்த 28 ஆம் திகதி ஜப்பானின் ஒசாகா நகரில் இடம்பெற்ற ஜி-20 உச்சி மாநாட்டின்போது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும், இந்தியப் பிரதமர் மோடியும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில்,வர்த்தக பிரச்சினைகள் குறித்து இருதரப்பு வர்த்தக அமைச்சர்கள் சந்தித்து பேசுவது என முடிவானது.இந் நிலையிலேயே ட்ரம்ப் இவ்வாறான குற்றச்சாட்டை இந்தியா மீது சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.