புதன் கிரகம் சூரியனை கடக்கும் அரிய நிகழ்வு 9ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.  ஒரு நூற்றாண்டுக்கு 8 முறை புதன் கிரகம் சூரியனை கடந்து செல்லும்.

2006ஆம் ஆண்டு நடந்த இந்நிகழ்வு 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடக்கிறது. இந்நிகழ்வை வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா, இந்தியா,இலங்கை  போன்ற நாடுகளில் காணலாம்.

இலங்கை நேரப்படி மாலை 4.15 மணிமுதல் 6.20 மணிவரை நடக்கும் இந்நிகழ்வை வெறும் கண்ணில் பார்க்ககூடாது என விஞ்ஞானிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

அடுத்து 2019ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் திகதி, 2032ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் திகதி ஆகதி தினத்தன்றே புதன்கிரகம்  சூரியனை கடக்கும் அரிய நிகழ்வு நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.