பேஸ்புக்கில் இருந்து நிரந்தரமாக வெளியேறுங்கள் என்கிறார் அப்பிலின் இணை நிறுவுனர்

Published By: Daya

10 Jul, 2019 | 03:35 PM
image

மக்களை பேஸ்புக்கிலிருந்து நிரந்தரமாக வெளியேறுமாறு அப்பிலின் இணை நிறுவுனர் ஸ்டீவ் வோஸ்னியாக் கோரிக்கை விடுத்துள்ளார்.

பேஸ்புக் உட்பட அதன் கீழ் இயங்கும் வட்ஸ் அப் மற்றும் இன்ஸ்ரகிராம் ஆகிய தளங்கள் மக்களின் தகவல் தனியுரிமையை மீறுகின்றனவா என ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைத்  தெரிவித்துள்ளார்.

இது குறித்து 68 வயதான ஸ்டீவ் வோஸ்னியாக் அமெரிக்காவின் வொஷிங்டன் விமான நிலையத்தில் வைத்து ஊடகவியலாளர்களிடம் மேலும் தெரிவிக்கையில்,

"பல தரப்பு மக்கள் உள்ளனர், மேலும் சிலருக்கு, பேஸ்புக்கின் நன்மைகள் மற்றும் தனியுரிமை  இழக்கப்படுகின்றன என்று தெரிவித்தார்.

பேஸ்புக் உள்ளிட்ட உரையாடல்களை ஒட்டுக்கேட்பது வருத்தமளிக்கிறது எனவும்  அவர் தெரிவித்தார். 

பேஸ்புக்கை விட்டு மக்கள் நிரந்தரமாக வெளியேற வேண்டும் என அப்பில் நிறுவனத்தின் துணை நிறுவனர் ஸ்டீவ் வோஸ்னியாக் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.

பயனாளிகள் தங்களுக்கு தனியுரிமை இருப்பதாக நினைக்கிறார்கள். குறுஞ்செய்திகள் அனுப்ப எனக்கு விருப்பமான விடயம் பொதுவாக எல்லோருக்கும் விருப்பமான ஒருவிடயம். ஆனால் இதில் உள்ள விபரீததத்தை எவரும் அறிவதில்லை.  எங்களின் விபரங்களை வெளியிடமால் இருப்பதற்கு தொகையை கேட்டாலும் நாங்கள் அறவிட தயாரகவுள்ளோம். எங்களை நாங்களே விளம்பரப்படுத்திகொள்ளவது போல அமைந்துள்ளது. 

கடந்த ஆண்டில் பேஸ்புக் நிறுவனத்திலிருந்து பயனாளிகளின்  தகவல்கள் கசிந்ததாகப் பெரிய சர்ச்சை எழுந்ததனையடுத்து  பேஸ்புக் நிறுவனத்தின் தகவல் தனியுரிமை கொள்கைகள் குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டது. 

மேலும் , மக்கள் தங்களது பேஸ்புக் கணக்குகளை அழித்துவிட வேண்டும் என பலரும் அறிவுறுத்தி வந்தனர். இந்தக் குரல்களுக்கு ஆதரவாக இருந்த முக்கியமானவர்களில் ஒருவரான அப்பில் நிறுவனத்தின் துணை நிறுவனர் ஸ்டீவ் வோஸ்னியாக் ஆதரவு தெரிவித்தது மட்டுமல்லமல்  அவர் கடந்த ஏப்ரல், 2018 இல், தனது பேஸ்புக் கணக்கை நீக்கிவிட்டமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26