தென் ஆபி­ரிக்­காவைச் சேர்ந்த மாண­வர்கள் குழு­வொன்று வீட்டில் தயா­ரிக்­கப்­பட்ட விமா­னத்தைப் பயன்­ப­டுத்தி தமது நாட்டின் கேப் நகரிலிருந்து  6 வார கால பய­ணத்தை மேற்­கொண்டு எகிப்­திய கெய்ரோ நகரை சென்­ற­டைந்து சாதனை படைத்­துள்­ளது.

வேறு­பட்ட பின்­ன­ணியைக் கொண்ட 20 மாண­வர்­களைக் கொண்ட குழு வால் மேற்­படி 4 ஆச­னங்­களைக் கொண்ட சிலிங் 4 விமானம் உரு­வாக்­கப்­பட்­டி­ருந்­தது. 

அந்த விமா­னத்தில்  12,000 கிலோ­மீற்றர் தூர பய­ணத்தை மேற்கொண்ட குழு­வினர் தமது பய­ணத்தின் போது நாம்­பியா, மலாவி, எதி­யோப்­பியா, ஸன்­ஸிபார், தன்­சா­னியா மற்றும் உகண்டா ஆகிய  நாடு­களில் தரை­யி­றங்­கி­யி­ருந்­தனர்.

இந்த யு ட்றீம் குளோபல் திட்­டத்தின் ஸ்தாப­கரும் அந்த விமா­னத்தின் விமா னி­யு­மான மெகான் வெர்னர் (17 வயது) தமது  பயணம் குறித்து விப­ரிக்­கையில்,

இந்த சாதனை குறித்து தாம் பர­வ­ச­ம­டை­வ­தாக குறிப்­பிட்­டுள்ளார்.

மேற்­படி இள­வ­ய­தினர் விமான தொழிற்­சா­லை­யொன்றால் தென் ஆபி­ரிக்­காவில் தயா­ரிக்­கப்­பட்ட பல்­லா­யி­ரக்­க­ணக்­கான விமான உதி­ரிப்­பா­கங்­களைப் பயன்­ப­டுத்தி 3 வாரங்­களில் இந்த விமானத்தை உரு­வாக்­கி­யி­ருந்­தனர்.

தாம் இந்தப் பய­ணத்தின்போது பல்­ வேறு சவால்­களை எதிர்­நோக்க நேர்ந்­ த­தாக குறிப்­பிட்ட மெகான் வெர் னர்இ எதி­யோப்­பிய தலை­நகர் அட்டிஸ் அபாபாவை சென்­ற­டைந்த போது தமக்கு எரி­பொ­ருளைப் பெற முடியாத நிலை ஏற்­பட்­ட­தாக கூறினார். 

அத் துடன்  தரையிலிருந்து அதிக உயரத் தில் பயணிக்க தமக்கு அனுமதியளிக் கப்பட்டிருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.