பதுளை அரச வைத்தியசாலையில் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்ட 30 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாக  பதுளைப் பிரதேச சுகாதார சேவைப்பணிப்பாளர்  தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்,

“ பதுளை மாநகர சபை எல்லைக்குள்ளான இங்குருகமுவைப் பகுதியில் சிறு பிள்ளைகள் உள்ளிட்டு 20 பேர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டிருப்பதும் பதுளை மாநகரின் ஏனைய பகுதிகளில் 10 பேர் உள்ளிட்டு 30பேர் டெங்கு நோயிற்கான சிகிச்சைகளைப் பெற்று வருகின்றனர். 

இவர்களில் மருத்துவத் தாதியொருவரும் சிகிச்சை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. 

கடந்த இரு வாரங்களாக இவ்வாறு டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டிருப்பவர்களின் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. நகரின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே நீர் தேங்கியிருப்பதினால் டெங்கு நுளம்புகள் பெருகக்காரணமாகவுள்ளது. 

அத்துடன் டெங்கு நுளம்புகளை அழிக்கும் வேலைத்திட்டங்களும் துரிதமாக முன்னெடுத்து வருகின்றோம்.” எனத் தெரிவித்தார்.