ஜேர்மனியில் 18 வயது யுவதி 14 மற்றும் 12 வயது சிறுவர்கள் பாலியல் வன்முறைக்குள்ளாக்கிய சம்பவம் சிறுவர்களிற்கு எதிராக வழக்கு தொடர்வது குறித்த புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

முல்ஹெய்ம் நகரை சேர்ந்த 12 வயது சிறுவனும் 14 வயது சிறுவர்கள் மூவரும்  18 யுவதியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியுள்ளனர்.

மனோநிலை பாதிக்கப்பட்ட பெண்மணியையே இவர்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

விளையாட்டு மைதானத்தின் பூங்கா போன்ற பகுதிக்கு குறிப்பிட்ட பெண்மணியை அழைத்துச்சென்ற சிறுவர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

யுவதியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவதை சிறுவர்கள் வீடியோவில் பதிவு செய்தனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு அருகிலுள்ள வீட்டின் நாய் தொடர்ச்சியாக குரைத்ததை தொடர்நது வெளியில் வந்த வீட்டின் உரிமையாளர்கள் சிலர் தப்பியோடுவதை கண்டு காவல்துறையினருக்கு தகவல்களை வழங்கியுள்ளனர்

சிறுவர்களால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட யுவதியை மீட்டு காவல்துறையினர் மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளனர்.

சிறுவர்கள் கடுமையான வன்முறையில் பல மணிநேரம் ஈடுபட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குற்றச்செயல்களில் ஈடுபட்ட சிறுவர்கள் அனைவரும் பாடசாலைகளில் இருந்து இடைநீக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை ஜேர்மனியில் 14 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களிற்கு எதிராக வழக்கு தொடர முடியாது என்பதால் இவர்களை விசாரணைக்கு உட்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஜேர்மனியில் குற்றவியல் பொறுப்பிற்கான  வயதினை குறைக்கவேண்டும் என பல வருடங்களாக கோரிவருவதாக காவல்துறை சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அதிகமான தண்டனை குற்றங்களை குறைக்கும் என்பது இளைஞர்கள் மத்தியில் வெற்றியளிக்காது என  ஜேர்மனியின் நீதிபதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.