வர்த்­த­கப்­போ­ருக்கு மத்­தி­யிலும் சீனாவில் விரி­வ­டையும் அமெ­ரிக்க கம்­ப­னிகள்

Published By: Digital Desk 3

10 Jul, 2019 | 11:07 AM
image

பெய்ஜிங், (சின்­ஹுவா), ஷங்­காயிலுள்ள அமெ­ரிக்க வர்த்­தக சபையின் (American Chamber of Commerce - AmCham Shanghai) தலை­வ­ரான கெர் கிப்­ஸுக்கு சீனாவில் அமெ­ரிக்க வர்த்­தகம் தொடர்பில் சக­லதும் தெரியும். 'சீனாவில் அமெ­ரிக்க வர்த்­த­கத்தின் குரல்' என்று பிர­பல்­ய­மான 'அம்ஷேம் ஷங்காய் ' பெரும்­பாலும் ஷங்­காயில் இயங்­கு­கின்ற 1500 அமெ­ரிக்க கம்­ப­னி­க­ளி­லி­ருந்து 3000 உறுப்­பி­னர்­களைக் கொண்­டுள்­ளது. உற­வு­களைக் கட்­டி­யெ­ழுப்பும் வாய்ப்­புக்­களை வழங்­கு­வதன் மூல­மாக அமெ­ரிக்­கா­வுக்கும் சீனா­வுக்கும் இடை­யி­லான வர்த்­தக உற­வு­களை பலப்­ப­டுத்­து­வதை அது நோக்­க­மாகக் கொண்­டி­ருக்­கி­றது.

"ஒட்­டு­மொத்­த­மாக, அமெ­ரிக்க வர்த்­தக நிறு­வ­னங்கள் சீனாவில் மிகவும் நன்­றாக செயற்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றன. உற­வுமுறை மிகவும் பய­னு­று­தி­யு­டை­யதாக இருந்து வரு­கி­றது. இந்த உற­வு­மு­றையிலிருந்து அமெ­ரிக்க பாவ­னை­யா­ளர்கள் மிகப்­பெ­ரிய பயன்­களை அடைந்­து­வ­ரு­கி­றார்கள் "என்று சின்­ஹுவா செய்தி நிறு­வ­னத்­து­ட­னான நேர்­காணல் ஒன்றில் கிப்ஸ் கூறினார். சீனாவில் இயங்­கு­கின்ற பல அமெ­ரிக்க கம்­ப­னி­களும் அவர் கூறி­யதை ஒத்­துக்­கொள்­கி­றார்கள். சீனாவின் திறந்­த­ போக்கு, ஒத்­து­ழைப்பு மற்றும் கூட்டு அபி­வி­ருத்தி ஆகி­யவை இரு நாடு­க­ளுக்கும் சரி­யான அணு­கு­மு­றைகள் என்று அவர்கள் நம்­பு­கி­றார்கள்.

விரி­வ­டையும் வர்த்­தக பிர­சன்னம்

அம்ஷேம் சீனா­வி­னாலும் (AmCham China) அம்ஷேம் ஷங்­கா­யி­னாலும் கூட்­டாக மே மாதம் நடத்­தப்­பட்ட ஆய்­வொன்றில் அமெ­ரிக்­கா­வி­னதும் சீனா­வி­னதும் வரி­வி­திப்­புகள் அதி­க­ரித்து வரு­வதால் தங்­க­ளது வர்த்­தகச் செயற்­பா­டுகள் மீது எதிர்­ம­றை­யான தாக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தாக ஆய்­வின்­போது பதி­ல­ளித்­த­வர்­களில் 74.9 சத­வீ­த­மா­ன­வர்கள் கூறி­னார்கள். வரி­வி­திப்­பு­களின் தாக்கம் உற்­பத்­தி­க­ளுக்­கான வேண்­டு­கை­களில் காணப்­ப­டு­கின்ற குறைவு, உயர்ந்த உற்­பத்திச் செலவு, உற்­பத்­தி­க­ளுக்­கான உயர்ந்த விற்­பனை விலை ஆகி­ய­வற்றின் ஊடாக உண­ரப்­ப­டு­வ­தாக ஆய்வின் மூலம் தெரி­ய­வந்­தி­ருக்­கி­றது.

"இந்த வர்த்­த­கப்போர் சக­ல­ரையும் பாதிக்­கின்­றது என்­பதை நிலை­வ­ரங்கள் உணர்த்­து­கின்­றன. ஆனால், சீனாவை விட்டு வெளி­யே­றப்­போ­வ­தா­கவோ அல்­லது சந்­தையைக் கைவி­டப்­போ­வ­தா­கவோ அந்த கம்­பனி­கள் கூறி­ய­தாக நான் கேள்­விப்­ப­ட­வில்லை. அவ்­வா­றாக எந்த தக­வலும் எனக்கு கிடைக்­க­வில்லை" என்று கிப்ஸ் மேலும் ­சொன்னார்.

சந்­தை­யைக் கைவி­டாமல் இருப்­பது மாத்­தி­ர­மல்ல, சில அமெ­ரிக்க கம்­ப­னிகள் சீனாவில் அவற்றின் வர்த்­தகச் செயற்­பா­டு­களை (சீனச்­சந்­தையின் நீண்­ட­கால நோக்­கி­லான வளர்ச்­சியை மன­திற்­கொண்டு) விரி­வாக்­கிக்­கொண்­டி­ருக்­கின்­றன.

சீனாவில் 40 வரு­டங்­க­ளாக செயற்­பட்­டு­வரும் அமெ­ரிக்­காவின் பாரிய இர­சா­யன மூலப்­பொ­ருட்கள் கம்­ப­னி­யான டவ் கூட்­டி­ணைப்பு நிறு­வனம் (Dow Inc) கடந்­த­மாதம் கிழக்கு சீன மாகா­ண­மான ஜியாங்­சுவின் ஷாங்­யி­யாகாங் நகரில் புதிய விசேட சிலிக்கன் பசை தொழிற்­சா­லையை ( New Silicone specialty rest line) ஆரம்­பித்­தது. போக்­கு­வ­ரத்­துத்­துறை, தனிப்­பட்ட பரா­ம­ரிப்பு மற்றும் இலத்­தி­ர­னியல் பாவ­னைப்­பொ­ருட்கள் உற்­பத்தித்துறை உட்­பட பல பிரி­வி­னரின் உயர்­செ­யற்­பாட்டு மூலப்­பொ­ருட்கள் தேவையை நிறை­வேற்றும் நோக்­குடன் ஆரம்­பிக்­கப்­படும் இந்த தொழிற் ­சாலை ஆசிய --பசு­பிக்கில் மிகப்­பெ­ரி­ய­வற்றில் ஒன்­றாகும்.

"சீனா டவ் நிறு­வ­னத்­துக்கு ஒரு மூலோ­பாயச் சந்­தை­யா­கவும் உற்­பத்தி மற்றும் புத்­தாக்க முயற்­சி­க­ளுக்­கான மைய­மா­கவும் மாத்­தி­ர­மல்ல, அந்த நிறு­வ­னத்தின் சர்­வ­தேச விநி­யோக சங்­கி­லித்­தொ­டரின் முக்­கி­ய­மான அங்­க­மா­கவும் இருக்­கி­றது " என்று ஆரம்ப வைப­வத்தில் கலந்­து­கொண்ட டவ் நிறு­வன பிர­தம நிறை­வேற்று அதி­காரி ஜிம் ஃபிற்­றர்லிங் கூறினார்.

அமெ­ரிக்­காவின் பிர­மாண்­ட­மான கோப்பி நிறு­வ­ன­மான ஸ்ரார்­பக்ஸைப் பொறுத்­த­வரை, சீனா அதன் மிகப்­பெ­ரி­யதும் விரை­வாக வளர்ந்­து­ வ­ரு­கின்­ற­து­மான சர்­வ­தேச சந்­தை­யாகும். சியட்­டிலை தள­மா­கக்­கொண்ட இந்த கோப்பி சங்­கி­லித்­தொடர் நிறு­வனம் அதன் கோப்­பிக்­க­டை­களின் எண்­ணிக்­கையை நிதி­யாண்டு 2022 அளவில் இரண்டு மடங்­காக்­கு­வதன் (6000) மூல­மாக சீனாவில் பேரார்­வ­மிக்க விரி­வாக்கத் திட்­ட­மொன்றைத் தீட்­டி­யி­ருக்­கி­றது.

"சீனாவில் நீண்­ட­கால நோக்­கி­லான முத­லீட்டைச் செய்­வதில் நாம் உறு­தி­கொண்­டி­ருக்­கின்றோம் " என்று ஸ்ரார்பக்ஸ் தலை­வரும் பிர­தம நிறை­வேற்று அதி­கா­ரி­யு­மான கெவின் ஜோன்சன் கூறினார்.

முத­லீட்­டுக்கு தலை­சி­றந்த இடம்

பல அமெ­ரிக்க கம்­ப­னிகள் சீனாவின் பரந்து அகன்ற உள்­நாட்டுச் சந்­தையில், ஏரா­ள­மான மனி­த­வ­ளத்தில், இயற்­கைக்கு பாதிப்­பில்­லாத சுற்­றுச்­சூழல் அமை­வு­ட­னான ஆற்­றல்­மிகு தொழில்­துறை மற்றும் உயர்­த­ர­மான நுகர்வு ஆகி­ய­வற்றில் வாய்ப்­புக்­களை நாடு­கின்­றன.

"அமெ­ரிக்க கம்­ப­னிகள் சீனாவை தங்­களின் வளர்ச்­சிக்­கான முதல்­நி­லை­யான சந்­தை­களில் ஒன்­றாக நோக்­கு­கின்­றன. உலக கம்­ப­னி­களைப் பொறுத்­த­வரை சீனச்­சந்தை இன்­றி­ய­மை­யா­த­தாகும் " என்று கெர் கிப்ஸ் கூறினார்.

ஒரு நூற்­றாண்­டுக்கும் அதி­க­மான காலத்­துக்கு முன்னர் சீனாவின் சந்­தையில் பிர­வே­சம் ­செய்த முத­லா­வது பல்­தே­சியக் கம்­ப­னி­களில் ஒன்­றான அமெ­ரிக்க கைத்­தொழில் குழு­ம­மான ஜெனரல் எலெக்ரிக்ஸ் கம்­பனி சீனாவின் பொரு­ளா­தார மறு­சீ­ர­மைப்பும் உயர்­த­ர­மான அபி­வி­ருத்­தியும் மிகப்பெரு­ம­ளவில் வாய்ப்­புக்­களை உரு­வாக்­கு­வதை காண்­கி­றது.

"நக­ர­ம­ய­மாக்­கல், எளிதில் பெறக்­கூ­டி­ய­தாக இருக்கும் சுகா­தா­ரப்­ப­ரா­ம­ரிப்பு, தூய்­மை­யான சக்தி மற்றும் இன­ரர்நெற் பிளஸ் உட்­பட சீனாவின் தேசிய பொரு­ளா­தார வளர்ச்சி மூலோ­பா­யங்கள் ஜெனரல் எலெக்­ரிக்­ஸுக்கு பெரு­ம­ளவு வாய்ப்­பு­களை வழங்­கி­யி­ருக்­கின்­றன " என்று அந்த குழு­மத்தின் தலை­வரும் பிர­தம நிறை­வேற்று அதி­கா­ரி­யு­மான றச்சேல் டுவான் சின்­ஹு­வா­வுக்கு கூறினார். பல வரு­டங்­க­ளாக ஜெனரல் எலெக்ரிக்ஸ் சீனாவில் அதன் தலை­மை­ய­க­மான ஷங்­காயில் 120 கோடி டொலர்­க­ளுக்கும் அதி­க­மாக முத­லீடு செய்­தி­ருக்­கி­றது என்று குறிப்­பிட்­டி­ருக்கும் டுவான், சீனச்­சந்­தையின் உள்­ளுரம் மற்றும் நீடிப்­பாற்றல், உயர்­தர கைத்­தொ­ழில்­துறை, மூல­தனம், ஆற்றல், நிலம் ஆகி­யவை தொடர்­பி­லான முன்­னு­ரிமைக் கொள்­கை­க­ளினால் தாங்கள் பெரும் பய­ன­டைந்­த­தாக கூறு­கிறார்.

"சீர்­தி­ருத்தம், திறந்த போக்கு ஆகி­யவை மீது சீனா கொண்­டி­ருக்­கின்ற மன­வு­றுதி சீனாவில் எமது வர்த்­தக செயற்­பா­டு­களை விஸ்­த­ரிப்­ப­தற்கு நம்­பிக்­கையை ஊட்­டி­யது " என்று சீனாவில் வளர்ந்த முத­லா­வது ஜெனரல் எலெக்­ரிக்ஸின் பிர­தம நிறை­வேற்று அதி­கா­ரி­யான டுவான் கூறினார்.

டவ் நிறு­வ­னத்தின் பிர­தம நிறை­வேற்று அதி­காரி ஜிம் ஃ பிற்­றர்­லிங்­கைப்­பொ­றுத்­த­வரை, சீனாவின் நிலை­பே­றான நக­ர­ம­ய­மாக்கல் தங்­க­ளது கம்­ப­னிக்கு மிகச்­சி­றந்த வாய்ப்பு என்று கூறு­கிறார்.

"அடுத்த இரு தசாப்­தங்­களில் நக­ரங்­க­ளுக்கு நக­ரு­வார்கள் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்ற 30 கோடி மக்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிக்க சீனா செயற்­தி­ற­னு­டைய சக்தி, வச­தி­யான குடி­யி­ருப்பு மேம்­பட்ட உட்­கட்­ட­மைப்பு வச­திகள், தூய நீர், தூய காற்று ஆகி­ய­வற்றைக் கொடுக்­க­வேண்­டிய தேவை இருக்­கி­றது. இத்­த­கைய பல சவால்­களை சமா­ளிப்­ப­தற்கு தேவை­யான உற்­பத்திப் பொருட்­களை டவ் நிறு­வ­னத்தால் வழங்­கக்­கூ­டி­ய­தா­யி­ருக்கும் " என்றும் அவர் குறிப்­பிட்டார்.

புத்­தாக்­கத்தின் தேசம்

பல வரு­டங்­க­ளாக சீனாவில் வாழ்ந்­து­வரும் நீடித்த அனு­ப­வ­மு­டைய ஒரு தொழி­ல­திபர் என­ற­வ­கையில் கெர் கிப்ஸ் சீனாவை வர்த்­தகம் செய்­வ­தற்கு சிறந்த ஒரு நாடு என்றும் புத்­தாக்­கங்­களைச் செய்­வ­தற்கு தலை­சி­றந்த இடம் என்றும் கூறு­கிறார். " புத்­தாக்­க­மில்­லாத நாடு என்று சீனாவை எவ­ரா­வது கூறு­கிறார் என்றால் அவர் அங்கு உண்மை நிலை­வ­ரத்தை கவ­னிக்கத் தவ­றி­யி­ருக்­கிறார் என்­றுதான் அர்த்தம். ஏனென்றால், சீனாவில் பெரு­ம­ளவு புத்­தாக்க முயற்­சிகள் குறிப்­பாக, தொழில்­நுட்­பத்­து­றை­யிலும் கைத்­தொ­லை­பேசி தயா­ரிப்­பிலும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன " என்றும் அவர் குறிப்­பிட்டார்.

சீனாவில் சீனா­வுக்­காக

அதே­வேளை, அமெ­ரிக்க நிறு­வ­னங்கள் அவற்றின் செயற்­பா­டு­களை சீனச்­சந்­தைக்கு ஏற்­ற­வாறு தக­வ­மைத்­துக்­கொண்­டி­ருக்­கின்­றன. அதற்­காக " சீனாவில் சீனா­வுக்­காக " என்ற மூலோ­பா­யத்தை அவை வகுக்­கின்­றன. சீனாவில் சீனா­வுக்­காக என்­பது தயா­ரிப்பை உள்­நாட்டுப் பண்­பு­ம­யப்­ப­டுத்தி பிர­தா­ன­மாக சீனச்­சந்­தைக்கு சேவை­ செய்­வ­தற்கு சீனா­வுக்­குள்­ளேயே விநி­யோ­கத்­தர்­களை கண்­டு­பி­டிக்கும் ஒரு மூலோ­பா­ய­மாகும். அத்­த­கைய மூலோ­பாயம் பல கம்­ப­னி­க­ளுக்கு நியா­ய­மா­னதும் செயல்­மு­றைக்கு உகந்­த­து­மான ஒரு தெரி­வாக அமை­கி­றது. அதா­வது உள்­நாட்டுச் சந்தை வாய்ப்­புக்­களை நாடு­வ­தி­லான ஆற்­றலை பேணிக்­கொள்­ளக்­கூ­டி­ய­தாக இருக்­கின்ற அதே­வேளை தீர்­வை­களின் தாக்­கங்­களில் இருந்து கம்­ப­னிகள் தங்­களைப் பாது­காத்­துக்­கொள்­வ­தற்கும் வச­தி­யாக இருக்கும்.

ஷங்­காயில் அமைந்­தி­ருக்கும் ஸ்ரார்பக்ஸ் றிசேர்வ் றோஸ்­ர­றியே அமெ­ரிக்க காப்பி கம்­ப­னி­யான ஸ்ரார்பக்ஸ் சீனாவில் முதலில் திறந்த நிலை­ய­மாகும். உல­க­ளா­விய ரீதியில் சங்­கி­லித்­தொ­ட­ராக அமைந்­தி­ருக்கும் ஸ்ரார் பக்ஸ் காப்­பி­ க­டை­களின் ஒரு அங்­க­மாக விளங்கும் ஷங்காய் நிலையம் இணை­யம் மூ­ல­மான வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கும் சேவையை வழங்­கு­கி­றது. வாடிக்­கை­யாளர் கையா­ளு­வ­தற்கு இல­கு­வாக வடி­வ­மைக்­கப்­பட்ட டிஜிட்டல் வெப் அப்ஸ்­களை பயன்­ப­டுத்தி கைத்­தொ­லை­பேசி மூலம் தொடர்­பு­கொண்டு ஷங்காய் ஸ்ரார்பக்ஸ் றோஸ்­ர­றியின் சேவை­க­ளைப்­பெற்று மகி­ழு­மாறு வாடிக்­கை­யா­ளர்கள் அழைக்­கப்­ப­டு­கி­றார்கள். விசே­ட­மாக அமைக்­கப்­பட்ட அப்ஸ்கள் மூலம் ஸ்ரார்பக்ஸ் நிறு­வ­னத்தின் கோப்­பிக்­கொட்­டையிலிருந்து கோப்பி பானம் வரை­யான செயன்­மு­றைகள் பற்­றிய தகவல்களையும் அறிந்துகொள்ளலாம்.

"53,000க்கும் அதிகமான எமது பங்காளர்களினால் வழங்கப்படுகின்ற மேம்பா டான வாடிக்கையாளர் அனுபவத்தின் கார ணமாக உலகின் வேறு எந்தப் பகுதியை யும் விட சீனாவில் துரிதமாக ஸ்ரார் பக்ஸ் வளர்ச்சிகண்டு வருவதுடன் புத்தாக்க முயற் சிகளையும் விரைவாக முன்னெடுக்கிறது" என்று ஸ்ரார்பக்ஸ் காப்பி கம்பனியின் தலை வரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கெவின் ஜோன்சன் கூறினார்.

சீனாவின் பொருளாதார வாய்ப்புக்கள் குறித்து பேசிய ஷங்காய் அம்சேம் தலை வரான கிப்ஸ் சீனா அதன் சந்தையை திறந்ததாக தொடர்ந்து வைத்திருக்க வேண் டும் என்பதுடன் உலக கம்பனிகள் அந்த சந்தையில் வாய்ப்புகளைப் பெறுவதை சுலபமானதாக்கவும் வேண்டும். சீனா எழுச்சி பெறும்; தொடர்ந்து எழுச்சி பெறும் என்ற நம்பிக்கையுடன்தான் அமெரிக்க கம்பனிகள் முதலீடுகளை செய்துகொண்டிருக்கின்றன என்று குறிப்பிட்டார்.

"வர்த்தகத்துறைப் பின்புலத்தில் நோக்கு கையில், சீனா எழுச்சி பெறுவதைக் காணும் போது அது குறித்து நாம் அஞ்சவில்லை; உண்மையில், சீனா தொடர்ந்து எழுச்சி பெறும் என்று நாம் நம்பிக்கையுடன் எதிர்வு கூறுகிறோம். அந்த எழுச்சியை மனதிற் கொண்டு தான் நாம் எமது செயற்பாடுகளை முன்னெடுக்கின்றோம்" என்றும் அவர் கூறி னார்.

வீ.தனபாலசிங்கம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57