மாத்தளை, லக்கல பொலிஸ் நிலையத்தில் ஆயுதங்களை கொள்ளையிட்ட சம்பவ தினத்தன்று பொலிஸ் சாவடியில் வைத்து மதுபானம் அருந்திய மோட்டார் வாகன பிரிவு பொறுப்பதிகாரி  மஹேஸ் பிரியங்க, மாத்தளை பொலிஸ் நிலையத்தின் உதவிப் பொலிஸ் அதிகாரி என். ஜனக் வீரசிங்கவால்  பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.