இந்தியாவிலுள்ள கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமில் குண்டு மின்குமிழ்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

கும்மிடிப்பூண்டியிலுள்ள இலங்கை தமிழர் அகதிகள் முகாமில்  920 குடும்பங்களைச் சேர்ந்த 2833 இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர்.

குறித்த அகதிகளின் வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் செயல்படும் அகதிகள் துறை சார்ந்த அலுவலகத்தின் முன்பு ஒரு அறிவிப்பு விளம்பரம் ஒட்டப்பட்டுள்ளது.

அதில் முகாமில் உள்ள வீடுகளில் மின்சாரம் செலவாகும் இதனால், குண்டு மின்குமிழ்களை பயன்படுத்திட கூடாது. மேலும் முகாமில் உள்ள கடைகளில் குண்டு மின்குமிழ்களையும் விற்க கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து முதல் கட்டமாக முகாமில் உள்ள கடைகளில் குண்டு மின்குமிழ்களின்  விற்பனை நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.