(எம்.மனோ­சித்ரா)

நாட்டு மக்கள் அனை­வ­ருக்கும் தமது காணி­களை சொந்­த­மாக்கிக் கொள்­வ­தற்­காக காணி கொள்­வ­னவு மற்றும் காணி தொடர்­பான ஒழுக்க விதிகள் சட்­டத்தின் மூலம் நாட்டில் பாரிய பிரச்­சி­னைகள் ஏற்­பட வாய்ப்­புள்­ளது.  அமெ­ரிக்­காவின்  வச­திக்­கேற்­பவே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இந்த சட்­டங்­களை கொண்டு வர முயற்­சிக்­கிறார்  என்று ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பொதுச் செய­லாளர் தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்தார். சுதந்­திர கட்சி தலை­மை­ய­கத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்ட அவர் இதனை குறிப்­பிட்டார்.  அவர் மேலும்  தெரி­விக்­கையில்; பிர­தமர் அறி­மு­கப்­ப­டுத்த எதிர்­பார்த்­துள்ள காணி தொடர்­பான இந்த சட்­டங்கள் மூலம் பரம்­ப­ரை­யாக காணி­க­ளுக்கு உரிமம் கொள்ள முடி­யாத நிலை­மையை தோற்­று­விக்கும். இதனால் அப்­பாவி விவ­சாய மக்­களே பெரிதும் பாதிக்­கப்­ப­டு­வார்கள். கடந்த 2003ஆம் ஆண்டு இந்த சட்டம் கொண்டு வரப்­பட்ட போதும் அதனை நடை­மு­றைப்­ப­டுத்த முடி­யாமல் போனது. இதே சட்­டத்தை 2015 ஆம் ஆண்டு மீண்டும் கொண்டு வர முயற்­சித்த போது எமது எதிர்ப்பால் அந்த முயற்சி கைவி­டப்­பட்­டது. எனினும் மீண்டும் இவ்­வ­ருடம் மார்ச் 23ஆம் திகதி இது தொடர்­பான யோச­னையை பிர­தமர் அமைச்­ச­ர­வையில் சமர்ப்­பித்­துள்ளார். ஆனால் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு இவ்­வி­ட­யத்தில் உடன்­பாடு கிடை­யாது. இதை அவர் அமைச்­ச­ரவைக் கூட்­டத்­திலும் தெரி­வித்­துள்ளார். தற்­போதும் நீதி­மன்­றத்தில் இந்த சட்டம் தொடர்­பான வழக்கு விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

காணி தொடர்­பான இந்த சட்­டங்கள் மூலம் திரு­கோ­ண­மலை தொடக்கம் கொழும்பு வரை­யான பொரு­ளாதார வலய திட்­டத்­திற்கு மில்­லே­னியம் சவால் ஒப்­பந்­தத்தின் மூலம் அமெ­ரிக்­கா­வுக்கு இடங்­களை தாரை வார்ப்­பதே பிர­த­மரின் நோக்­க­மாகும். இதற்­காக அமெ­ரிக்­கா­வி­ட­மி­ருந்து 480 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் பெற்றுக் கொள்­ளப்­ப­ட­வி­ருப்­ப­தாக தெரி­ய­வ­ரு­கி­றது. ஆனால் இந்த நிதி எதற்­காக, ஏன் பெறப்­ப­டு­கி­றது என்ற ஒரு திட்­ட­மி­டலும் இல்லை. இவ்­வாறு உள்­நாட்டு இடங்­களை அமெ­ரிக்கா உள்­ளிட்ட ஏனைய நாடுகளுக்கு தாரை வார்த்துக் கொடுக்க வேண்டாம் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம். அவ்வாறில்லையென்றால் மக்கள் இதற்கு எதிராக வீதிக்கு இறங்க வேண்டிய நிலைமையே ஏற்படும் என்றார்.