வீதியை மறித்து போடப்பட்ட கற்களால் பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்பட்டுள்ளதுடன் இன்னும் எதுவித  நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

 நேற்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணி முதல் இன்று வரை கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனை மதிரிஸா வீதியில் கம்பெரலிய அபிவிருத்தி திட்டம் என்ற போர்வையில் குறித்த கற்கள் சட்டவிரோதமாக வீதிகளில் கொட்டப்பட்டுள்ளன.

குறிப்பாக இவ்வீதியில் பயணிப்பவர்கள் மாற்று பாதை ஏதும் இன்றி போக்குவரத்து செய்வதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

குறித்த விடயம் தொடர்பாக பொதுமக்களில் சிலர் பொலிஸ் அவசர பிரிவிற்கு  அறிவித்த பின்  இரவு குறித்த இடத்திற்கு பொலிஸார் வருகை தந்திருந்தனர்.

இப்பிரச்சினை தொடர்பாக சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் கிராம சேவகரை அழைத்து கற்களை கொட்டியவர் தொடர்பாக விபரங்களை பெற்று சென்றுள்ளனர். 

குறித்த வீதியில் அப்படியே கற்கள் கொட்டப்பட்டு தேங்கி கிடக்கின்றன.இவ் அபிவிருத்தி திட்டத்தை மேற்கொள்ளும் அரசியல் கட்சி மௌனமாக இருப்பதுடன் கற்களை கொட்டியதாக கூறப்படடும் ஒப்பந்த காரர் தலைமறைவாகி உள்ளார்.