சந்தேகத்தின் பேரில் காதல் ஜோடியை கைதுசெய்து பொலிஸார் விசாரித்த போது அவர்கள் இருவரும் பெண்களென தெரியவந்துள்ளது.

இச் சம்பவம் கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

கம்பஹா பிரதேசத்தில் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கையொன்றை நேற்று மேற்கொண்டனர்.

இதன் போது பொலிஸார் சந்தேகத்தின் பேரில் காதலர்கள் இருவரை கைதுசெய்துள்ளனர். 

கைதுசெய்யபட்ட காதலர்கள் இருவரின் நடத்தையிலும் பொலிஸாருக்கு மேலும் சந்தேகமேற்பட்டநிலையில், குறித்த இருவரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டனர்.

இந்நிலையிலேயே கைதுசெய்யப்பட்ட இருவரும் பெண்கள் என பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது.

இவர்கள் இருவரும் இவ்வாறு ஜோடியாக வெளியில் செல்வதை பழக்கமாக வைத்திருந்தமை விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, பொலிஸார் சம்பந்தப்பட்ட இரு பெண்களின் பெற்றோரையும் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து அவர்களை பெற்றோரிடம் எச்சரித்து ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில், பொலிஸ் நிலையத்தை விட்டு பெற்றோருடன் வெளியேறிய இரு பெண்களும் தமது பாதணிகளை கழற்றி வீசிவிட்டு தப்பிச்சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.