நம்பிக்கையில்லாப் பிரேரணை ; த.தே.கூ.வின் இறுதி தீர்மானம் நாளைமறுதினம்

Published By: Vishnu

09 Jul, 2019 | 09:13 PM
image

(ஆர்.யசி )

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிப்பதா இல்லையா என்பது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு நாளைமறுதினம் இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளது. 

அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை மக்கள் விடுதலை முன்னணி கொண்டுவர்ந்துள்ள நிலையில் நாளையும் நாளை மறுதினமும் நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் நடத்தி நாளைமறுதினம் வாக்கெடுப்பை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக  ஜே.வி.பியுடன் பிரதான எதிர்க்கட்சியான மஹிந்த தரப்பினரும் வாக்களிக்கவுள்ளனர். 

இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது நிலைப்பாடு என்ன என்பதை நாளைமறுதினம் (11ஆம் திகதி) தீர்மானிக்கும். 

கடந்த திங்கட்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நடத்திய பேச்சுவாரத்தையின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு தமக்கு வேண்டும் என பிரதமர் நேரடியாக ஆதரவை கேட்டிருந்தார். 

எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது நிலைப்பாடு குறித்து இன்னமும் தீர்மானம் எடுக்கவில்லை என்பதை கூறியதுடன் தமது பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் பேசி தீர்மானம் எடுக்கப்படும் என கூறியிருந்தனர். அதற்கமைய இன்று காலை தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற குழு கூடியது. 

இதன்போது தாம் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெளிவுபடுத்தியிருந்தார். எனினும் தாம் ஆதரிப்பதா இல்லையா என்பது கூறித்து இறுதி தீர்மானம் ஒன்றினை எடுக்கவில்லை. இந்நிலையில் நாளைமறுதினம் வியாழக்கிழமை காலை மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பை பாராளுமன்ற குழுக் கூட்டம் கூடி தமது இறுதி தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக தீர்மானித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58