சிட்டிசன் டிவலப்மன்ட் பிஸ்னஸ் பினான்ஸ் பிஎல்சி(CDB) நிறுவனம் அதன் ‘பரிகணக பியஸ’ சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் அதன் ஒன்பதாவது தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூடத்தினை மொனராகலை லகினகல கனிஷ்ட வித்தியாலயத்தின் மாணவர்களின் பயன்பாட்டுக்காக அண்மையில் கையளித்தது.
இதுவரை 13.2 மில்லியன் முதலீட்டினை CDB, பரிகணக பியஸ திட்டத்திற்கு வழங்கியுள்ளது.
நாடுமுழுவதும் உள்ள வசதி குறைந்த பாடசாலைகளில் கல்வி கற்கும் இளம் மாணவர்களின் தகவல் தொழில்நுட்ப அறிவினை மேம்படுத்தும் வகையிலும் எதிர்கால சவால்களை எதிர்கொள்ள அவர்களை தயார்படுத்தும் குறிக்கோளுடனும் IT ஆய்வுகூடங்களை வழங்கி வருகிறது.
CDB இன் இந்த திட்டம் குறித்து லகினகல கனிஷ்ட வித்தியாலயத்தின் அதிபர் வை.கே.நிமல் சந்திரசிறி கருத்து தெரிவிக்கையில்,
“இந்த அன்பளிப்பு மூலமாக எமது பாடசாலை மாணவர்கன் இப்பொழுது புதிய எல்லைகளை வகுக்க முடியும். அறிவு சார்ந்த அன்பளிப்பொன்றினை மதிப்பிடவோ அல்லது ஒப்பிடவோ முடியாது.
CDB இன் இந்த அன்பளிப்பு ஊடாக எமது மாணவர்கள் பெற்றுக்கொள்ளும் தொழில்நுட்ப அறிவானது சுற்றியுள்ளோர் மற்றும் எமது சமூகத்தினரிடையே ஊடுருவதாக அமையும். எமது மாணவர்களை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாது எம்மையும் எமது நாட்டின் பாரிய அபிவிருத்திக்கும் பங்களிப்பு வழங்கக்கூடியதாக அமையும்” என்றார்.
இந்த தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூடமானது HP கணினிகள் LCD monitors, printers, எழுதுபொருள் ஸ்கேனர்கள், கணினி மேசைகள், கதிரை, பிற உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் இணைய வசதி போன்ற நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
IT ஆய்வுகூடத்தை பாடசாலை வசம் ஒப்படைத்த IT மற்றும் இணைய-வர்த்தக பிரிவின் சிரேஷ்ட பிரதி பொது முகாமையாளர் இம்டாட் நகுய்ப் மக்களை மேம்படுத்துவதற்கான பொறுப்பினை CDB பூர்த்தி செய்துள்ளது என திடமான நம்புகிறார்.
“தொழில்நுட்பம் என்பது வாய்ப்புக்களை பன்மடங்கு விஸ்தரிப்பதுடன், இத்தகைய வாய்ப்புக்களையே எமது இளைஞர்களுக்கு நாம் வழங்க விரும்புகின்றோம். நாம் முதன்முதலாக பரிகணக பியஸ திட்டத்தை ஆரம்பிக்கும் போது எமது கிராமப்புற இளைஞர்களின் IT அறிவை மேம்படுத்துவதே எமது ஒட்டுமொத்த குறிக்கோளாக இருந்த போதிலும்ரூபவ் இதன் அனுகூலங்கள் அதிகம் என்பதை இத்திட்டத்தின் வெளிப்பாடுகள் ஊடாக நாம் உணர்ந்து கொண்டோம்.
பொறுப்பு வாய்ந்த கூட்டாண்மை நிறுவனம் எனும் ரீதியில் எமது இளம் தலைமுறையினருக்கு தொழில்நுட்பத்தின் இன்றியமையாத பிரிவுகளை வழங்கி அவர்களது வெவ்வேறுபட்ட தொழில் வாழ்க்கையில் முன்னோக்கி செல்வதற்கான வழிப்பாதையை வழங்குவதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்” என நகுய்ப் தெரிவித்தார்.
CDB நிறுவனத்தைப் பொறுத்த வரை ஒட்டுமொத்த பிரதான CSR கூறுகளுடனும் ஒன்றிணைக்கப்பட்ட நிலையான திட்டமாக பரிகணக பியஸ ஆய்வுகூட முதலீடுகள் காணப்படுகின்றன.
ITஅறிவை மேம்படுத்தல் மற்றும் பிராந்தியத்திலேயே முக்கிய BPO மற்றும் தொழில்நுட்ப கூடமாக தேசத்தை நிலைப்படுத்துவதற்கான நாட்டின் குறிக்கோளுடன்ரூபவ் போட்டிமிக்க அபிவிருத்திக்கான பன்முக வாய்ப்புகளை இலங்கையைச் சேர்ந்த இளம் தலைமுறையினருக்கு வழங்குவதனூடாக அதிகாரமளித்தல் மீதான கவனத்தை CDB நிறுவனம் தொடர்ந்து தக்க வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM