(ஆர்.விதுஷா)

சுகாதார,சுதேசமருத்துவ அமைச்சர்  ராஜித சேனாரத்னவை , அரசியலிலிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கைகளை பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து பிரதிநிதிகளும் கட்சி பேதமின்றி  ஒன்றிணைந்து மேற்கொள்ள  வேண்டும் என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்தார். 

அமைச்சர் ராஜித சேனாரத்ன மீதான  குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு  வேண்டுகோள்  விடுப்பதாக அரச வைத்திய  அதிகாரிகள்  சங்கத்தினருக்கும்   பாராளுமன்ற உறுப்பினர்  தினேஷ்குணவர்தனவிற்கும்  இடையில் இன்று காலை சந்திப்பொன்று  இடம் பெற்றது.  

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே வைத்தியர் ஹரித ஹேரத் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.