பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபட்ட நபர் ஒருவர் மீண்டும் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதற்காக அவரை சிறையிலிருந்து விடுதலை செய்து பாலியல் தொழில்களில் ஈடுபடுபவர்களிடம் செல்வதற்கு மேற்கு அவுஸ்திரேலிய உச்ச  நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

எட்வேர்ட் வில்லியம்  லட்டிமர் என்ற 61 வயது நபரிற்கே நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

குறிப்பிட்ட நபர் தனது பதின்ம வயது முதல் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதற்காக நீண்ட காலம்  சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

2005 இல் பூங்காவில் உறங்கிக்கொண்டிருந்த நபர் ஒருவரை பாலியல் வன்முறைக்கு உட்படுத்த முயன்றதற்காக இவரிற்கு மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

11 வருடத்தில் இரண்டாவது தடவையாக அவரை விடுதலை செய்துள்ள நீதிமன்றம் பல நிபந்தனைகளையும் விதித்துள்ளது.

குறிப்பிட்ட நபர் அனுமதிபெற்று பாலியல் தொழிலாளர்களிடம் செல்லலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட நபர் ஆபத்தானவராக காணப்பட்டாலும் இந்த ஆபத்தை சமூகத்திற்குள் கட்டுப்படுத்தலாம் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

பாலியல் தொழிலாளர்களிடம் செல்வது மாத்திரம் தனது பாலியல் உணர்வுகளை கட்டுப்படுத்துவதற்கான அவரின் திறனை அதிகரிக்காது என தெரிவித்துள்ள நீதிபதி ஆனாலும் இது பாதுகாப்பிற்கான காரணியாக விளங்கும் என தெரிவித்துள்ளார்.