(நா.தினுஷா)
நம்பிக்கையில்லாப் பிரேரணையை சந்தோசத்துடன் எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துநில் தெரிவித்துள்ளார்.
நாளைய தினம் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் மற்றும் ஆதரவு வழங்காத ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் யார்? மஹிந்தராஜ பக்ஷவின் அணியில் எமக்கு ஆதரவு அளிப்பது யார்? ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அணியில் உள்ளவர்கள் யார்? என்பதை தெளிவாக அறிந்துக்கொள்ள கூடியதாக இருக்கும். மேலும் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை சந்தோசத்துடன் எதிர்க்கொள்ள தயாராக உள்ளோம்.
அலரிமாளிகையில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்தார்.
2015 ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கம் இந்த குறுகிய நான்கு வருடகாலப் பகுதிக்குள் அதிக நம்பிக்கையில்லாப் பிரேரணைகளையும் அதிக எதிர்ப்புக்களையும் சந்தித்துள்ளது.
இவ்வாறான தொடர் எதிர்ப்புகளினால் எங்களின் அரசாங்கம் பலம் குறையவில்லை. எங்களுக்கான ஆதரவு அதிகரித்த வண்ணமே உள்ளது. தொடர்ச்சியான நம்பிக்கையில்லாப் பிரேரணைகளின் மூலம் அரசாங்கம் ஒருபோதும் வலுவிழக்கப் போவதில்லை. முன்பு இருந்ததை விடவும் அரசாங்கத்துக்கு ஆதரவு இன்னும் அதிகரிக்கும் என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM