நாட்டில் குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட சர்வதேச பயங்காரவாத அமைப்பான ஐ.எஸ். ஐ.எஸ், தீவிரவாத அமைப்பினை ஒரு மாததிற்குகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியுமாக இருந்தால் ஏன் இந்த சாதாரணமாக வடபகுதியில் ஒரு பகுதிக்குள் இயங்குகின்ற 15 - 20 இளைஞர்களைக் கொண்ட இந்தக் வாள் வெட்டுக் கும்பலை அடக்க முடியாது. என ஈரோஸ் கட்சியின் தலைவர் இ.பிரபாகரன் கேள்வி எழுப்பினார் .
யாழ்ப்பாணதில் அமைந்துள்ள ஈரோஸ் கட்சியின் அலுவலத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போதே மேற்படி கேள்விளை எழுப்பினார்.
இது தொடர்பில் அவர்,மேலும் தெரிவிக்கையில்,
இந்த வாள் வெட்டுக் குழுக்கள் தானாக தோற்றம் பெற்றது என்று சொல்லவிட முடியாது. இதற்கு பின்னால் ஏதோ ஒரு பலமான பின்னணி இருக்கின்றது. அதாவது, தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்க்கையை சீர்குலைப்பதற்கான எத்தனிப்பாக இருக்க வேண்டும் மற்றும் தமிழ் மக்கள் ஒரு பெரும்பான்மை இனமாக வரக்கூடாது, தமிழ் மக்கள் அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளக்கூடாது என்ற ஒரு நிலைப்பாட்டில் தான் இது உருவாக்கப்பட்டதோ என்ற சந்தேகம் வலுவாக எழுகின்றது.
இந்த நிலையில், இதன் பின்னணியை நாங்கள் பார்க்க வேண்டியுள்ளது. இந்த வாள் வெட்டு வன்முறைக் கும்பல்களின் அடவாடிகளை, அரசாங்கம் கண்டும் காணாதது போல் இருக்கின்றது. ஒரு வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றது என்றால், அந்தக் கணத்தில் இருந்து இரண்டு அல்லது மூன்று மணித்தியாலத்திற்கு பிறகு தான் இராணுவமோ, பொலிஸோ அந்த இடத்திற்கு செல்கின்றது.
உயிர்த்த ஞாயிறு தினத்தில் நாட்டில் நடைபெற்ற குண்டுத்தாக்குதலுடன் தொடர்புபட்ட சர்வதேச பயங்காரவாத அமைப்பான ஐ.எஸ். ஐ.எஸ், தீவிரவாதிகளை, ஒரு மாததிற்குகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியுமாக இருந்தால் ஏன் இந்த சாதாரணமான வடக்கில் ஒருபகுதிக்குள் இருக்கின்ற 15 - 20 இளைஞர்களைக் கொண்ட இந்தக் கும்பலை என் அடக்க முடியாது.
இந்த நிலையில், இதற்கு பின்னணியாக யார் இருக்கின்றார்கள் என்பதனை நாங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். இது சாதாரண ஒரு பொதுமகனுக்கும் தெரியும். இதனால் மக்களாகிய நாங்கள் விழிப்பாக இருக்க வேண்டும். இளைஞர் , யுவதிகள் விழிப்பாக இருக்க வேண்டும், பேரினவாத சக்திகள் தமிழினத்தை சீரழிப்பதற்கும், தமிழர்களுடைய அரசியல் அந்தஸ்த்து, அதிகாரம் எல்லாவற்றையும் இல்லாமல் செய்வதற்கு கங்கனம் கட்டிக் கொண்டு நிற்கின்ற நிலையில், நாங்கள் அவதானமாக இருக்க வேண்டும்.
இதனால் நாம் எமது அரசியல் அந்தஸ்த்து அதிகாரங்களை வென்றெடுப்பதற்கு நாங்கள் அனைவரும் வேறுபாடுகளை மறந்து ஒன்றினைய வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM